• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
rss blog twitter fb english sinhala
செயல்முறை
இலங்கையில்அறிமுகப்படுத்தப்பட்ட ‘இரண்டாவது குடியரசு யாப்பு 1978’ இற்குப் பின்னரான கடந்த நான்கு தசாப்தங்களாக, இலங்கை நாட்டு மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றும் பொருட்டு அவற்றினை உண்மையான வடிவில் பிரதிபலிக்கும் வகையில் நாட்டினுள் புதியதொரு அரசியலமைப்பினை இயற்றுவதற்கான கருத்து ஒருமைப்பாடு அனைவராலும் ஏகமனதாக தெரிவிக்கப்பட்டது.

அவ்வகையில் இலங்கை நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் செயல்முறைகளை மூன்று கட்டங்களாக பரந்தளவில் வகைப்படுத்தலாம்.

பொது ஆலோசனை செயல்முறை
அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறையின் பொருட்டு இதற்கான  முதலாவது கட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுமக்கள் பிரதிநிதித்துவங்களின் குழு நியமனத்துடன் மக்களுடைய கருத்துக்களை கண்டறியும் பொருட்டு அமைச்சரவை அமைச்சர்களால் ஆரம்பிக்கப்பட்டது.  இப் பொது ஆலோசனை செயன்முறையானது தொடர்ந்து சில  மாதங்களாக பொதுமக்கள் பிரதிநிதித்துவங்களின் குழுவினால் நாடளாவிய ரீதியில் பரந்தளவில் நடைபெற்று அதன்மூலம் மக்களது தேவைகளையும் அபிலாஷைகளையும் பெற்றுக் கொண்டு வடிவமைக்கும் கட்டமைப்பாகவும் இது விளங்கியது.  பொதுமக்களின் ஆர்வமான பங்களிப்புக்கள் மற்றும் கலாசார உள்ளக  உள்ளீர்ப்புக்களுக்கு இச் செயல்முறை திட்டம் சிறந்ததொரு தளத்தை அமைத்துள்ளது. நாடாளாவிய ரீதியில் பொதுமக்களின் கலந்துரையாடல்களின் ஊடாக அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் எழுத்து மூலமாகவும் வாய்மூலமாகவும் கிடைத்த நியாயமான சமர்ப்பிப்புக்களை உண்மையான வடிவில் அறிவதற்கு இவ் பொதுமக்கள் பிரதிநிதித்துவ குழுவின் ஆணையும் உரிமைக்கட்டளையும் உதவுகின்றது. அவ்வகையில் நாட்டிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களிலும் இதற்கான பொதுமக்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், அவற்றினை ஒருமித்து ஒன்றிணைத்த முக்கிய சமர்ப்பிப்பு பொதுமக்களின் அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

அவ்வகையில் பொதுமக்கள் பிரதிநிதித்துவங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அவற்றின் உண்மையான தன்மையுடன் உறுதி செய்யப்படும் வகையில், உரிய கவனத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் பிரதிநிதித்துவ குழுவின் இறுதி அறிக்கை அதன் உரிய பரிந்துரைகளுடன் நியமனம் செய்யப்பட்ட 21 அங்கத்தவர்களை உள்ளடக்கிய வழிப்படுத்தும் குழுவுக்கும்,  ஆழ்ந்த ஆய்வுகளுக்காக 06 உப குழுக்களுக்கும் குழுவின் ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கும் மேலாக, நியமிக்கப்பட்ட விடயப் பகுதிகளில் குறிப்பிட்ட பிரதிநிதித்துவங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் வழிப்படுத்தும் குழுவினால் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டது. அத்துடன்  அதன் மூலம் பெறப்பட்ட சமர்ப்பிப்புக்கள் பொது பிரதிநிதித்துவ குழுவினால் கவனத்தில் எடுக்கப்பட்டன. மற்றும் அது தொடர்பில் 2016 ஆம் ஆண்டு ஜூலை 08 என திகதியிடப்பட்ட இரண்டாவது அறிக்கை வழிப்படுத்தும் குழு மற்றும் உப குழுக்களுக்கு அவர்களது உன்னத கவனிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வகையில் குறிப்பிட்ட செயல்முறையிலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகரும் வகையில் செயல்முறைத் திட்டத்தினை மேலும் மெருகூட்டும் வகையில் அரசியல் கட்சிகள், மாகாண பிரதிநிதிகள்,  மற்றும் ஆர்வமுள்ள குழுக்கள் எனப்பல பங்குதாரர்கள் உள்ளடங்கலாக புத்திஜீவிகள் பலர் அரசியலமைப்பு சபை க்கான குழுவின் மூலம் வரவழைக்கப்பட்டனர்.
அரசியலமைப்பு சபை செயல்முறை
பாராளுமன்ற செயல்முறை