• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
rss blog twitter fb english sinhala

உபகுழு அறிக்கைகள் (19 நவம்பர் 2016)

அறிமுகம்

டிப்படை உரிமைகள், நீதித்துறை, நிதி, சட்டமும் ஒழுங்கும், பகிரங்க சேவை மற்றும் மத்திய - பிராந்திய தொடர்புகள் ஆகிய விடயப்பரப்புக்கள் பற்றி விதப்புரை செய்வதற்காக ஆறு உப குழுக்கள் அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்டன. இவ் உபகுழுக்களின் அறிக்கைகள் இன்னமும் வழிப்படுத்தும் குழுவினால் கலந்துரையாடப்படவில்லை. இந்த அறிக்கைகள் அரசியலமைப்புச் சபையின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படுகின்றன.
பல்வேறு முக்கிய விடயப்பரப்புக்கள் தொடர்பாக பல ஒத்த விதப்புரைகள் காணப்பட்ட போதும், குறித்த சில அம்சங்களில் வேறுபடும் முன்மொழிவுகளையும் உப குழுக்களின் அறிக்கைகள் கொண்டுள்ளமை தவிர்க்க முடியாததே.
உபகுழு அறிக்கைகள்மற்றும் அவை பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றைவழிப்படுத்தும் குழு அதன் இறுதி அறிக்கையைத் தயார் செய்தலில் பரிசீலிக்கும்.