• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
rss blog twitter fb english sinhala

அரசியலமைப்பு சபை வழிப்படுத்தும் குழுவின் கலந்துரையாடல்

Steering Committee 2 1அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட வழிப்படுத்தும் குழு இன்று அதன் 27 ஆவது கூட்டத்தை நடத்தியது. தற்போது கலந்துரையாடப்படும் மூன்று பிரதான விடயப்பரப்புகளாக தேர்தல் மறுசீரமைப்பு, அதிகாரப் பரவலாக்கம் மற்றும் ஆட்சித்துறை ஆகியவை இனங்காணப்பட்டுள்ளன.


சில விடயப்பரப்புகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்ற போதிலும், எல்லா விடயங்களும் முழுமையாகப் பரிசீலிக்கப்படும் வரை திட்டவட்டமான எவ்வித முடிவுகளும் மேற்கொள்ளப்படமாட்டாது.

ஆறு உப குழுக்களும் அவற்றின் பணிகளை நிறைவு செய்துள்ளன. வழிப்படுத்தும் குழு எல்லா விடயங்கள் தொடர்பாகவும் இணக்கப்பாடொன்றுக்கு வருவதற்கு முயற்சிப்பதற்கு முன்னர் அவற்றின் அறிக்கைகளைப் பரிசீலிக்கும். அத்தகைய இணக்கத்தை அடையும் நடவடிக்கையில், இப்போதைக்கு கலந்துரையாடல்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படமாட்டாது. இணக்கப்பாடொன்றை அடைந்ததும், அரசியலமைப்பு சபையை அமைப்பது பற்றிய 2016 மார்ச் 09ஆம் திகதிய தீர்மானத்தில் எதிர்வுகூறப்பட்டவாறு, இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்படும். வழிப்படுத்தும் குழு இடைக்கால அறிக்கையை 2016 நவம்பர் மாதம் அளவில் சமர்ப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.