• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

வரலாறு

king 2

 

லங்கையின் அரசியலமைப்பு வரலாறு நாட்டின் வெற்றிகள், போராட்டங்கள் மற்றும் அழுத்தங்களை பிரதிபலித்து நிற்கின்றது. காலனித்துவ ஆட்சியின் மூலமாக நவீனத்துவமானது சமுதாயங்களின் மத்தியில் திணிக்கப்பட்டது. மற்றும் 16 ஆம் நூற்றாண்டில் நாட்டின் சில பகுதிகள் போர்த்துக்கேய ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானிய பேரரசுகளின் கீழ் இயங்கி அவற்றினையெல்லாம் தாண்டி இறுதியாக 1948 ஆம் ஆண்டில் இலங்கை நாடு விடுதலை பெற்று சுதந்திரமடைந்த நாடாக மாற்றம் பெற்றது.

கிறிஸ்துக்கு பின்னரான 05 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை நாடானது பெரியதொரு வரலாற்றினை தன்னகத்தே கொண்டுள்ளது. அவ்வகையில் நவீனத்துவத்துக்கான முன்னரான வரலாற்று காலமானது மன்னர்களுடன் தொடர்புபட்டிருந்தது. காலப்போக்கில், இவ் மன்னர் ஆட்சி அதிகாரத்தினை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததுடன் அங்கிருந்து பௌத்த சமயத்துக்கான அறிமுகம் கிடைக்கின்றது. நாட்டைச் சுற்றியுள்ள புவியியல் அண்ட பூகோள அமைப்பின் அடிப்படையில் ஆசியாவைச் சுற்றியுள்ள நாடுகளிலும் மத்திய கிழக்கு மற்றும் பல நாடுகளிலும் இலங்கை நாடு மிகவும் சிறப்பானதாகவும் தொன்மை மிக்கதாகவும் அறியப்படுகின்றது.

இலங்கையின் காலனித்துவமானது முக்கியமாக மூன்று காலகட்டங்களை கொண்டதாக காணப்படுகின்றது. அவ்வகையில் போர்த்துக்கீசரின் ஆட்சிக் காலப்பகுதி, ஒல்லாந்தரின் ஆட்சிக்காலப்பகுதி, பிரித்தானியரின் ஆட்சிக்காலப்பகுதி ஆகியவற்றினைக் குறிப்பிடலாம். ஆயினும் நாட்டினுள் காலனித்துவ ஆட்சியானது 1505 ஆம் ஆண்டு போர்த்துக்கீசரின் வருகையுடன் ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து கி.பி 1505 இல் போர்த்துக்கேயர் சிலர் பிரான்சிஸ்கோ தெ அல்மேதா என்பவனைத் தலைவனாகக் கொண்டு காலித் துறைமுகத்தை அடைந்தனர். அதன் பின்னர் தர்மபராக்கிரமபாகு என்பவன் தலைமையில் 1580 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் கோட்டைக்காடு என்ற நகரை கைப்பற்றியதுடன் அதனைத் தொடர்ந்து அடுத்த சில வருடங்களுக்கு அவனே ஆட்சி செய்தான். அதனைத் தொடர்ந்து வந்த காலத்தில் போர்த்துக்கேயர் சிறிது சிறிதாக கரையோர மாகாணங்களில் தமது ஆதிக்கத்தினை அதிகமாக செலுத்தி ஆதிக்கத்தினை கைப்பற்றினர்.

1638 இல் வேஸ்ட வோல்ட் என்பவனின் தலைமைத்துவத்திலான ஒல்லாந்தக் குழுவினர் மட்டக்களப்புக்கு வந்ததுடன் மன்னன் இரண்டாம் இராஜசிங்கனைச் சந்தித்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டான். அவ் உடன்படிக்கையின் படி போர்த்துக்கேயர் நாட்டிலிருந்து வௌியேற்றப்பட்டதுடன், 1638 - 1663 ஆண்டு காலப்பகுதி இலங்கை ஒல்லாந்தர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவ்வகையில் ஒல்லாந்த காலனித்துவம் இலங்கையில் 1640 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்தனர். பிரித்தானிய முடியின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை நேரடியாக வருவதற்கு முன்பு பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமே இலங்கையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதன் பின்னர் ஏமியன்ஸ் (1802) உடன்படிக்கை என்பது பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற்கும், பிரித்தானிய அரசுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும். இதன் பிரகாரம் 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது. இதிலிருந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், நீதிப்பரிபாலனம், நிர்வாக விடயங்கள் பிரித்தானிய அரசினால் இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த தேசாதிபதியால் நிறைவேற்றப்பட்டன.

ஒல்லாந்தர் காலத்தில் பிரதேச நிர்வாகம் என்பதில் மிகவும் கவனம் செலுத்தப்பட்டது. அவ்வகையில் அவர்களது ஆட்சி ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் செயற்படுத்தப்பட்டது. அதனை கச்சேரி முறையாக (மாவட்ட செயலகம்) கொள்ளலாம். அத்துடன் இவர்களது காலப்பகுதியில் நாட்டில் உரோமன் டச்சுச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசியல் கட்டமைப்புக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டமை தொடர்பாக நோக்குகின்ற போது கி.பி 1815 காலப்பகுதிகளில் மன்னராட்சி முறையானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. மலைநாட்டின் ஆளுந்தரப்பினருடன் செய்து கொண்ட உடன்படிக்கை மூலம் ஆங்கிலேயர் 1815 இல் கண்டியினை சம்பூர்ணமாகக் கைப்பற்றினர். 1815 இல் கண்டி ஒப்பந்தம் என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடையும் வரை பிரித்தானிய அரசின் ஒரு பாகமாகவே விளங்கியது. அரசின் நவீனத்துவ வடிவமைப்புக்களை செப்பனிடும் வண்ணம் இலங்கைச் சமூகம் இவ்வாறான அடித்தளங்களை பின்னணியாகக் கொண்ட வரலாற்றினை தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது.

நாட்டின் அரசியலமைப்பு ஜனநாயகத்துக்கான பாதையானது சர்வஜன வாக்குரிமை யின் ஆரம்ப காலகட்டம், அரசின் சாதகமான மாற்றங்கள், சுகாதாரம் மற்றும் கல்வியில் காணப்பட்ட பலமான சமூகநலக் கொள்கைகள், என்பவற்றின் மூலம் ஒப்பீட்டளவில் சிறப்பானதாகக் குறிக்கப்பட்டது. இக் காலகட்டத்தில் இலங்கையானது இனப்பிரச்சினை, மற்றும் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத இயக்கம் போன்ற மிகப் பெரும் சவால்களை எதிர்கொண்டதுடன் அவற்றில் சிறந்த அனுபவத்தினையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து நாட்டில் பெருங்காலமாக நடாத்தப்பட்டு வந்த உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் ஜனநாயக ஆட்சி மீதான உறுதி, சட்டம் மற்றும் ஒழுங்கு முறை ஆட்சிகளின் வலுவான நிலை, பல்லின மக்களுக்கான அபிலாஷைகளை நிறைவேற்றல் ஆகியன நிறைவேற்றப்பட வேண்டிய சவால்களாக நாட்டின் முன் வைக்கப்பட்டன. அவ்வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாடானது புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதனூடாக இந்த சவால்களை எதிர்கொள்ள முற்படுகின்றது.

உலகம் முழுவதும் சிலோன் என்ற பெயரால் அறியப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் முதல் முதலாவதாக எழுதப்பட்ட அரசியலமைப்பு ஒன்று ஆணைச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதவே 1931 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியலமைப்பாகும். ஆயினும் இவ் அரசியல் யாப்புக்கு முன்னரான வகையில் காலத்துக்கு காலம் பல அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அரசியலமைப்பில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், அரசியலமைப்பு அரசாங்கத்தினை நிறுவும் வகையிலும் காலனித்துவ நிர்வாகத்தினால் ஒவ்வொரு அரசியலமைப்புக்களும் உருவாக்கப்பட்டது. அவ்வகையில்

  • கோல்புறூக் - கேமரன் சீர்திருத்தங்கள் 1833
  • குறூ மக்கலம் சீர்திருத்தங்கள் 1912
  • மனிங் சீர்திருத்தங்கள் 1922
  • மனிங் - டிவன்சயர் சீர்திருத்தங்கள் 1924

பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது அரசியலமைப்பு கோல்புறூக் கேமரன் சீர்திருத்தமேயாகும். இவ் அரசியலமைப்பு நாட்டின் அரசியலமைப்பு துறையில் அடித்தளத்தினை வேரூன்ற ஏதுவாக அமைந்தது. அத்துடன் தற்போதுள்ள கட்டமைப்பு மாற்றங்களை கொண்டு வருவதற்கும் இது உதவியது. கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின் படி இலங்கையில் சட்டசபை ஒன்று உருவாக்கப்பட்டது. அவ்வகையில் இவ்வாறான அடுத்ததடுத்த சீர்திருத்தங்கள் நாட்டில் படிப்படியாக முன்னேற்ற பொறிமுறைகளைக் கையாண்டு நடைமுறைப்படுத்தியது. அவ்வகையில் வகுப்புவாரி அடையாள அடிப்படையில் சட்டமன்றத்துக்கான தேர்தல் முறையினையும் குறிப்பிட்டு கூறலாம். மற்றும் வாக்களிப்பதற்கான உரிமை, இது பற்றி குறிப்பிட்டு நோக்கும் போது, அப்போதய காலத்தில் செல்வச்செழிப்பு மற்றும் கல்வி அடிப்படையில் வாக்களிப்பதற்கான உரிமை வரையறுக்கப்பட்டது.

சட்ட சபையில் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையானது உள்ளூர் தலைவர்களின் நிர்வாக சக்தி வலு அடிப்படையில் மேலும் அதிகரித்தது. இவ்வாறான இந்த நேரத்தில், உள்ளூர் அரசியல் தலைமைத்துவம்  நிர்வாகம் மீதான விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டு மக்களை அணிதிரட்ட தொடங்கியது. இதன் பொருட்டு சுய அரசாங்கத்துக்கான தேவை நாட்டின் மத்தியில் படிப்படியான வேகத்தைப் பெற்றுக் கொண்டது. இவ்வாறான சூழ்நிலையில் டொனமூர் அரசியல் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை இல்லாதொழிக்கப்பட்டு அதற்காக சர்வஜன வாக்குரிமை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன், ஜனநாயக நிறுவனங்கள், நிர்வாக குழு முறைமை, அமைச்சரவை மற்றும் பிரதேச கவுன்சில் முறைமை, என்பன சில இவ் அரசியல் யாப்பின் முக்கிய குறிப்பிடத்தக்க அம்சங்களாக காணப்பட்டன.

இந்த நேரத்தில் அரசியலமைப்பு சீர்திருத்த விவாதங்கள் மீது இரண்டு அரசியல் கேள்விகள் முக்கிய ஆதிக்கம் செலுத்தியது. அவ்வகையில் பிரித்தானியாவிடமிருந்து பெற்ற சுதந்திரம் ஒன்றாகவும் மற்றும் அரசாங்கத்தில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம்  என்பன முக்கியமாகக் காணப்பட்டு அதன் பின்னர் இலங்கை நாடானது சுதந்திரமடைந்த நாடாக மாற்றம் பெற்றது.

நாட்டின் அரசியல் சுதந்திரத்தினை பெற்றுக் கொள்ளும் வகையில் உள்ளூர் அரசியல் தலைமைத்துவங்கள் பேரம் பேசி விவாத நிலையை உருவாக்கினர், இதற்கான பாதையை இரண்டாம் உலகப் போர் வழி செய்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் முடிவில் 1944 இல் பிரித்தானிய அரசாங்கம் சோல்பரி பிரபுவின் தலைமையில் ஓர் ஆணைக்குழுவை இலங்கைக்கு அனுப்பியது. இலங்கை அமைச்சர்களால் வரையப்பட்ட யாப்பில் காணப்பட்ட சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு 1947 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. சோல்பரி அரசியல் யாப்பின்படி இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயக முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையின் நிர்வாகத்துறை பிரதமர் தலைமையிலான அமைச்சரவையிடம் காணப்பட்டது.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை அங்கத்தவரின் ஆதரவைப்பெற்ற ஒருவர் ஆளுநர் நாயகத்தால் பிரதமராக நியமிக்கப்பட்டார். இதன் போது இலங்கைப் பாராளுமன்றம் இருமன்றங்களைக் கொண்டதாக காணப்பட்டது. அவ்வகையில் முதலாம் மன்றமானது செனட் சபையாகவும் இரண்டாம் மன்றமாக பிரதிநிதிகள் சபையும் காணப்பட்டன. அவ்வகையில் பிரதிநிதிகள் சபையில் மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினரின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். ஆயினும் அடிப்படை உரிமைகள் தொடர்பான எந்தவொரு அத்தியாயமும் இவ் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவில்லை.

சிறுபான்மையினருக்கு எதிராக வேற்றுமைகளை பரப்பும் வகையில், சட்டங்கள் இயற்றுவதனை தடுக்கும் வகையில் இவ் யாப்பில் எவ்வாறாயினும் ஒர் வாசகம் உள்ளடக்கப்பட்டிருந்தது. பொதுச்சேவை சுயாதீனமாக இயங்கியது. சிலோனின் மூன்று (அரசியலமைப்பு) (திருத்தம்) சபையில் ஆணைகள், அனைத்து 1947, மற்றும் சிலோன் (சுதந்திர) சபையில் ஆணை, 1947 இல் பிரிட்டன் டொமினியன் என்ற வகையில் பிரிட்டன் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. குடியேற்ற தகுதியை அடிப்படையாகக் கொண்டு அரசியலில் அதிருப்தி வளர்ந்த வண்ணம் காணப்பட்டன. அத்துடன் முன்வைக்கப்பட்ட பல தரப்பட்ட காரணங்களால், இலங்கையின் அரசியல் தலைமைத்துவம், புராதன அரசியல் பாரம்பரியத்திலிருந்து வௌியேறும் வகையில் தீர்மானித்து அரசியலமைப்புக்கான புதிய முறையை தேர்வு செய்தனர். அவ்வகையில், அனைத்து தீர்மானங்களையும் சரிவர மேற்கொள்ளும் வகையில் அனைத்து பாராளுமன்ற அங்கத்தவர்களை உள்ளடக்கிய அரசியலமைப்புச் சபையாக அமைக்கப்பட்டது. அவ்வகையில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கொண்டு முதலாவது குடியரசு யாப்பொன்று 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

முதலாவது குடியரசு யாப்பின் கீழ் இலங்கை நாடானது சுதந்திரமானதும், இறையாண்மை மிக்கதும் சுயாதீனமானதுமாக கருதப்பட்டது. மக்களின் இறைமையை கருத்திற் கொண்டு அங்கீகாரத்தை வழிப்படுத்தியதாகவும் கொள்ளப்படுகின்றது. தேசிய அரசுப் பேரவை அமைப்பின் (NSA), சட்டமன்றம், குடியரசின் அரசு அதிகாரத்தின் உச்ச கருவியாக இருந்தது. மேலதிகமாக பௌத்த சமயத்திற்கு நடைமுறையிலும் யாப்பு ரீதியிலும் முன்னுரிமை வழங்கப்பட்டது. அத்துடன் சிங்களம் அரச கரும மொழி என்பதை அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டது. இது சாதாரண சட்டமாக இருந்த ஓர் விடயத்திற்கு நாட்டின் மிக உயர்ந்த சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் வழங்கப்பட்ட நிலைமையாகும். சில சிவில் அமைப்பின் மற்றும் அரசியல் உரிமைகள் என்பன அடிப்படை உரிமைகளாக யாப்பின் மூலம் கருதப்பட்டன. அத்துடன் நியமனம், இடமாற்றம், ஒழுக்காற்று கட்டுப்பாடு மற்றும் அதிகாரிகள் பணி நீக்கம் என்பன அமைச்சரவை அமைச்சர்கள் மூலமாக இயற்றப்பட்டு கவனம் செலுத்தப்பட்டது. இவ் யாப்பின் கீழ் இலங்கை இறைமையுள்ள, சுதந்திரக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இவ் யாப்பின் படி அரச நிறுவனங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களுக்காக நியமிக்கப்படும் நீதிபதிகளின் நியமனம் நீதித்துறை சேவைகள் ஆலோசனை வாரியத்திடம் ஆலோசனைகளை பெற்ற பின்னர் அமைச்சரவையின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி இன்னுமொரு முறை கலந்துரையாடும் தீர்மானம் அனைத்து அரசியல் தலைவர்களினாலும் முன்வைக்கப்பட்டது. முதலாவது குடியரசு யாப்பின் திருத்தமாக அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தியது. அவ்வகையில் பாராளுமன்றத்தின் தெரிவு செய்யப்பட்ட குழுவினரால் 1978 ஆம் ஆண்டு புதியதொரு அரசியலமைப்பு முறை கொண்டு வரப்பட்டு அதுவே இரண்டாவது குடியரசு யாப்பாக கொள்ளப்பட்டது. இவ் அரசியல் யாப்பில் குறிப்பிட்டு கூறக்கூடிய விடயமாக விசேடமாக காணப்பட்டது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையேயாகும். அவ்வகையில் நாட்டின் அனைத்து உயர் பதவிகளும் ஜனாதிபதியினாலேயே நியமனம் செய்யப்பட்டன. அத்துடன் அடிப்படை உரிமைகள், நீதித்துறை எனப் பலவற்றை உள்ளடக்கிய விரிவான முறையில் இவ் அரசியல் யாப்புக்கான சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இன்று வரையான நாட்களில் இவ் அரசியலமைப்பானது சுமார் 19 தடவைகள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் ஆறாவது, பதின்மூன்றாவது, பதினேழாவது, பதினெட்டாவது, மற்றும் பத்தொன்பதாவது திருத்தங்களைக் குறிப்பிட்டு கூறுவதுடன் இவை அரசியல் முக்கியத்துவத்தினையும் பெற்று நிற்கின்றது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தமானது இரண்டாவது குடியரசு யாப்பு இயற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரான காலங்களில் இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தமாகும். அவ்வகையில் 2000 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த யோசனை பாராளுமன்றில் வரைவாக முன்வைக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் முன்னோக்கிய வேலைகள் நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து அடிப்படை உரிமைகள், பிராந்தியங்களுக்கான விரிவான அதிகாரப் பரவலாக்கல் போன்ற கருத்துக்களை முன்வைத்து புதிய அத்தியாயங்களை தயாரித்தனர். எவ்வாறிருப்பினும் அவ் அரசியலமைப்பு வரைவானது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாது வரைவாகவே தோல்வியைக் கண்டது.

அவற்றினையெல்லாம் தாண்டி தற்போது இலங்கை புதிய அரசியலமைப்பு ஒன்றினை இயற்றும் பணிகளில் முற்று முழுதாக செயற்பட்டு வருகின்றது.