வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை வரைபு, அரசியலமைப்புச் சபையில் 21 செப்டெம்பர் 2017 அன்று குழுவின் தலைவர் என்ற வகையில் கௌரவ முதலமைச்சர் ரணில் விக்ரமசிங்க அவர்களால் மேசைப்படுத்தப்பட்டது. முழு அறிக்கையையும் வாசிக்க இங்கு அழுத்தவும்.
இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் 8 ஆகஸ்ட் 2017 அன்று வழிப்படுத்தும் குழுவிற்கு சமர்பிக்கப்பட்ட “மேம்படுத்தப்பட்ட இடைக்கால அறிக்கை வரைபின்” மீதான கவனிப்புகளாகும். வழிப்படுத்தும் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக கவனிப்புகளை சமர்ப்பிக்க 31 ஆகஸ்ட் 2017 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டது.
வழிப்படுத்தும் குழுவால் 6 செப்டெம்பர் 2017 அன்று தீர்மானிக்கப்பட்டதன் படி மேற் குறிப்பிடப்பட்ட அவதானிப்புகள் சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர்கள் அலுவலகத்தினரால் மொழிபெயர்க்கப்பட்டு உரிய குழு உறுப்பினர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1, 2, 8 ஆகிய திகதிகளில் இடைக்கால அறிக்கை அரசியலமைப்புச் சபையில் விவாதிக்கப்பட்டது.
இடைக்கால அறிக்கை மீதான விவாதங்களின் உத்தியோகபூர்வ அறிக்கை பொருளடக்கத்தின் அடிப்படையில் சுருக்கப்பட்டுள்ளது.
திகதிவாரியான சாராம்சங்களை கீழ்க்காணும் இணைப்பினூடாக வாசிக்கலாம்
அக்டோபர் 30 ஆம் திகதி நடைபெற்ற விவாதங்களின் சாராம்சம்
அக்டோபர் 31 ஆம் திகதி நடைபெற்ற விவாதங்களின் சாராம்சம்
நவம்பர் 1 ஆம் திகதி நடைபெற்ற விவாதங்களின் சாராம்சம்