• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

1. இடைக்கால அறிக்கை, ஆறு உபகுழு அறிக்கைகள், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பை ஆராய்வதற்காக வழிப்படுத்தும் குழுவினால் உருவாக்கப்பட்ட நிமித்த உபகுழு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வழிப்படுத்தும் குழுவிற்காக நிபுணர்கள் குழாமினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை. அறிக்கையில் உள்ளடங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம், மொழி உரிமைகள் மற்றும் அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகள் பற்றிய அத்தியாயங்கள் அடிப்படை உரிமைகள் பற்றிய உபகுழுவினால் முன்மொழியப்பட்டவையாகும். பிரசாவுரிமை பற்றிய அத்தியாயம் தற்போதைய அரசியலமைப்பில் இருந்து மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. [அறிக்கை காண்க]

* வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவம் - மேலே சொல்லப்பட்ட அறிக்கைக்கான அட்டவணை I ஆக.
* நிபுணர்கள் குழாமின் உறுப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துகளும் கடிதங்களும் - மேலே சொல்லப்பட்ட அறிக்கைக்கான அட்டவணை II ஆக.

2. வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான அரசியலமைப்புச் சபையில் நடைபெற்ற விவாதத்தில் ஆற்றப்பட்ட உரைகளின் விடய ரீதியான தொகுப்பு. [அறிக்கை காண்க]

3. மாகாண சபைகளின் முதலமைச்சர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விதப்புரைகள். [அறிக்கை காண்க]

9 ஆகஸ்ட் 2018

அரசியலமைப்புச் சபையின்வழிப்படுத்தும் குழு 8 ஆகஸ்ட் 2018 அன்று 2.30 மணிக்கு பாராளுமன்றத்தில் அமைந்துள்ள அரசியலமைப்புச் சபைச் செயலகத்தில் கூடியது. இதன் போது நிபுணர் குழுவால் தாயாரிக்கப்பட்ட வரைபு ஆவணம் சமர்பிக்கப்பட்டது. இவ் ஆவணம் வழிப்படுத்தும் குழுவின் இறுதிக்கட்ட கலந்துரையாடல்களுக்கு அடித்தளம் இடும். நிபுணர்கள் சிலரின் கருத்துகள் அடங்கிய வரைபும் குழுவிடம் கையளிக்கப்பட்டது.

சில தவறான அறிக்கைகள் அரசியலமைப்புச் சட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்ட வரைபினைத் தயாரிக்கும் ஆணை அரசியலமைப்புச் சபையின்வழிப்படுத்தும் குழுவிடமே உள்ளது. மேலும் அவ்வாறான வரைபு எதுவும் வழிப்படுத்தும் குழுவினால் தயாரிக்கப்படவில்லை.

அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழு 18 ஜூலை, 2018 அன்று கூடியது.

வழிப்படுத்தும் குழுவிற்கு அரசியலமைப்புச் சட்ட வரைபின் தயாரிப்பில் உதவும் வகையிலான ஆவணம் ஒன்றினைத் தயாரிப்பதில்  நிபுணர் குழு ஒன்று செயற்பட்டு வந்திருக்கின்றது. இவ் ஆவணம் செப்டெம்பர் 2017இல் வெளியிடப்பட்ட வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, பொதுநிதி, பொதுச் சேவை, மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான உறவு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய உபகுழுக்களின் அறிக்கைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது.

அரசியலமைப்புச் சபைச் செயலகமானது கைவசம் உள்ள அரசியலமைப்ப்ச் சீர்திருத்தம் பற்றிய பரிந்துரைகளை மக்களின் தேவைகளின் பின்புலத்தில் ஆராய்ந்து வருகின்றது.