• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் சார்பில் வெளியிடப்படும் பத்திரிகை அறிக்கை

அஸ்கிரிய பீடத்தின் அதி சங்கைக்குரிய மஹாநாயக்க தேரரை 2017 ஜுன் 28இல் நடைபெற்ற அரசியலமைப்பு மறுசீராக்கல் பற்றிய மாநாட்டிற்கு அழைத்தமை தொடரர்பான விடயம்:

அஸ்கிரிய பீடத்தின் அதி சங்கைக்குரிய மஹாநாயக் தேரர் அத்துடன் / அல்லது அவரது பிரதிநிதி உள்ளடங்கலாக சங்கைக்குரிய மஹா சங்கம் 2017 ஜுன் 28 இல் BMICH இல் நடைபெற்ற அரசியலமைப்பு மறுசீரமைப்புப் பற்றிய மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை எனப் பிரதான ஊடகத்தினைச் சேர்ந்த சில செய்திப் பத்திரிகைகள் அறிக்கையிட்டுள்ளன. சங்கைக்குரிய மஹா சங்கத்திற்குரிய அழைப்பு அனுப்பப்படாமலேயே மாநாடு நடைபெற்றது என்னும் முடிவிற்குச் சங்கச் சபை வந்துள்ளது எனவும் அது அறிக்கையிட்டுள்ளது.

மூன்று நிகாயாக்களையும் சேர்ந்த (சியாம், அமரபுர, ராமன்ய) அதி சங்கைக்குரிய மஹாநாயக்க தேரர்களுக்கும், ஏனைய சமயப் பிரதானிகளுக்கும் அழைப்புகள் உரிய முறையில் அனுப்பப்பட்டன என்பதை வழிகாட்டல் குழு தெளிவுபடுத்த விரும்புகிறது.

அழைப்பிதழ்கள் விரைவுத் தபால்மூலம் 2017 ஜுன் 21 இல் அரசியலமைப்புச் சபைச் செயலகத்தினால் அனுப்பப்பட்டன. இது வழிகாட்டல் குழு கூடி (2017 ஜுன் 20) மாநாட்டின் விடயங்கள் குழுவில் கலந்துரையாடப்பட்டு மாநாட்டுக்கான நிகழ்ச்சிநிரல் அங்கீகரிக்கப்பட்ட (திருத்தப்பட்டவாறாக) நாளுக்கு அடுத்த நாளாகும்.

மேலும், வழிகாட்டல் குழுவினால் நிகழ்வு இறுதியாகப் பரிசீலிக்கப்பட்டு உத்தியோகபூர்வ அழைப்புகள் அனுப்பப்படுவதற்கு முன்னர், 2017 ஜுன் 28ஆம் திகதி நடத்தப்படவுள்ள அரசியலமைப்பு மறுசீரமைப்புப் பற்றிய மாநாட்டில் அதி சங்கைக்குரிய மஹாநாயக்க தேரர்கள் கலந்துகொள்ளக் கூடியதாக இருக்குமா என்பதைக் கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட நிகாயாக்களின் / பீடங்களின் அலுவலகங்களை அரசியலமைப்புச் சபைச் செயலகம் 2017 ஜுன் 13, 14, 15 ஆம் திகதிகளில் தொடர்புகொண்டது.

மல்வத்த பீடத்தின் அதி சங்கைக்குரிய திப்பட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரரின் அலுவலகத்தினால் மாநாட்டில் அதி சங்கைக்குரிய மஹாநாயக்க தேரர் கலந்து கொள்வதற்கான சாத்தியமுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அஸ்கிரிய பீடத்தின் அதி சங்கைக்குரிய வரகாகொட சிறி ஞானரத்தன தேரரின் அலுவலகம், குறிப்பிட்ட திகதியில் நனுமுர பண்டிகை திட்டமிடப்பட்டுள்ளதால் அதி சங்கைக்குரிய மஹாநாயக்க தேரர் கலந்துகொள்ளமாட்டார் என அறிவித்தது.

மாநாடு நடைபெறும் தினத்தில் ராமன்ய நிகாயாவின் சங்கைக்குரிய நாபான பேமசிரி தேரர், அதி சங்கைக்குரிய மஹாநாயக்க ஆகியோர் மியன்மாரில் இருப்பர் எனவும் நிகாயாவின் சார்பில் மற்றுமொரு சங்கைக்குரிய தேரர் பதிலாக வருவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

அமரபுர நிகாயாவின் அதி சங்கைக்குரிய கொடுகொட தம்மலச மஹாநாயக்க தேரர் ஜுன் 28இல் அமர்வுகள் நடைபெறுகையில் தான் கலந்துகொள்ள எண்ணியுள்ளதாகச் சுட்டிக் காட்டினார்.

எவ்வாறாயினும், அதி சங்கைக்குரிய அஸ்கிரிய பீடத்தின் அலுவலகம் 2017 ஜுன் 27 இல் அரசியலமைப்பு சபைச் செயலகத்தினைத் தொடர்புகொண்டு (அழைப்பிதழில் உள்ள RSVP இலக்கத்தை) அதி சங்கைக்குரிய மஹாநாயக்க தேரர் வெளிநாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்டது.

அன்றைய தினம் அரசியலமைப்புச் சபைச் செயலகத்தினைத் தொடர்பு கொண்டு, அமரபுர நிகாயாவின் அதி சங்கைக்குரிய தேரர் நிலத்திவல நாயக்க தேரரின் மறைவினால் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டது.

ராமன்ய நிகாயாவின் அதி சங்கைக்குரிய மஹாநாயக்க தேரர், சங்கைக்குரிய நாபான பேமசிரி தேரர் மினய்மாரில் உள்ள காரணத்தினால் மாநாட்டிலே ராமன்ய நிகாயாவின் மஹாநாயக்கவை பிரதிநிதித்துவம் செய்ய சங்கைக்குரிய மடகமுவே விஜயா மைத்ரீ தேரர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனமானது சங்கைக்குரிய மாத்தலே தம்மகுசல அநுநாயக்க தேரரினால் மேற்கொள்ளப்பட்டது.

கலந்துகொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்த அதி சங்கைக்குரிய மல்வத்த தேரர், பிரதிநிதியாக சங்கைக்குரிய வெலிவிட்ட சொரத தேரரை நியமித்தார். சங்கைக்குரிய தேரர் மாநாட்டின் அமர்வு முழுவதிலும் பங்குபற்றினார்.

(மேற்குறிப்பிடப்பட்டவை அரசியலமைப்புச் சபைச் செயலகதத்தினால் வழிகாட்டல் குழுவின் கவனத்திற்கு 2017 ஜுலை 05ஆம் திகதி கொண்டு வரப்பட்டன.)

நீல் இத்தவல

வழிகாட்டல் குழுவின் செயலாளர்