• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

மாநாட்டிற்கு முன்னரான பத்திரிகை வெளியீடு : அரசியலமைப்பு மறுசீரமைப்புகள் பற்றிய தேசிய மாநாடு

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு மறுசீரமைப்புகள் தொடர்பான எல்லைகடந்த முயற்சிகளின் அங்கமாக இலங்கை அரசியலமைப்புச் சபைச் செயலகம் அரசியலமைப்பு மறுசீரமைப்புகள் பற்றிய தேசிய மாநாடொன்றை 2017 யூன் 28, புதன்கிழமை நடாத்தவுள்ளது. இந்த நிகழ்வானது, கௌரவ பிரதம அமைச்சர், இலங்கை அரசியலமைப்புச் சபைச் செயலக உறுப்பினர்கள், பரவலாகச் சாத்தியப்படும் பங்கேற்பை உறுதிசெய்வதற்கென பலதரப்பட்ட துறைகளிலுள்ள ஏனைய சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரால் சிறப்படையும்.

இலங்கை மக்களுக்கான அரசியலமைப்பு மறுசீரமைப்புகள் சார்ந்த உரையாடலில் ஈடுபடுத்தும் பொருட்டு பலதரப்பட்ட துறைகளிலுள்ள பரந்துசெல்கின்ற பங்கீடுபாட்டாளர்களை ஒன்றாகக் கொண்டுவருதலே இந்த மாநாட்டின் நோக்கமாகும். இலங்கையின் அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசாங்க மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதான அதிகாரிகளின் உரைகள் மற்றும் சட்ட நுணுக்கம் சார்ந்த சமர்ப்பணங்கள் ஆகியவற்றை இந்த நிகழ்வு முதன்மைப்படுத்திக் காட்டும். இந்தப் பெரும் முயற்சிக்கு வசதியளிப்பதற்கென, ஐக்கிய இராச்சிய பொதுநலவாய செயலகத்திலிருந்து தூதுக்குழுவொன்றுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி பிரதம நீதியரசரான மேன்மைதங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி டிகங் மொசெனேகே (Dikgang Moseneke) “அரசியலமைப்பின் மீதான இணக்கத்தை எட்டுதல் – தென்னாபிரிக்க அனுபவம்” எனும் தலைப்பில் மாநாட்டில் உரையாற்றுவதற்கு கனிவுடன் ஒப்புக்கொண்டுள்ளார். அரசியலமைப்பு உறுப்பினர்களுடனான கேள்வி – பதில் அமர்வு வடிவிலான திறந்த அரங்கமொன்றையும் இந்த மாநாடு முதன்மைப்படுத்திக் காட்டும்.

இம்மாநாடு காலை 9.30 மணி தொடக்கம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும்.