• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

அரசியலமைப்புச் செயலகத்தின் செய்தி வெளியீடு 25 ஜூலை 2018

சில தவறான அறிக்கைகள் அரசியலமைப்புச் சட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்ட வரைபினைத் தயாரிக்கும் ஆணை அரசியலமைப்புச் சபையின்வழிப்படுத்தும் குழுவிடமே உள்ளது. மேலும் அவ்வாறான வரைபு எதுவும் வழிப்படுத்தும் குழுவினால் தயாரிக்கப்படவில்லை.

மே 2016 இல் பத்து உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழு ஒன்று அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்டது. இக் குழு கலாநிதிகள், கல்விமான்கள், சட்டத்தரணிகள் மற்றும், பொறியியல், சமூக விஞ்ஞானங்கள் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்ற நபர்களை உள்ளடக்கியது. வழிப்படுத்தும் குழு பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து பெற்ற பரிந்துரைகளுக்கு அமைவாகவே நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.

இக் குழுவின் பிரதான பணி அரசியலமைப்புச் சபையின் குழுக்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்குதலும் வழிப்படுத்தும் குழுவிற்கு சமர்ப்பிக்கும் ஆவணத்தைத் தயாரித்தலுமாகும். வழிப்படுத்தும் குழு 24 மே 2018 அன்று கூடியபோது வழிப்படுத்தும் குழுவின் இறுதிக்கட்ட கலந்துரையாடல்களுக்கு அடித்தளம் இடும் வகையிலான அவ் ஆவணத்தினைத் தயாரிக்குமாறு நிபுணர் குழுவிற்குப் பணித்தனர்.

இந்த ஆவணம் வழிப்படுத்தும் குழுவினால் செப்டெம்பர் 2017 இல் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை, அடிப்படை உரிமைகள், நீதித்துறை, பொதுநிதி, பொதுச்சேவை, மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான உறவு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய உபகுழு அறிக்கைகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்பவற்றை மையப்படுத்தி அமையவிருந்தது.

இடைக்கால அறிக்கை மற்றும் உப குழு அறிக்கைகள் பொது மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன் அவற்றை அரசியலமைப்புச் சபையின் இணையத்தளத்தில் வாசிக்கலாம். (http://www.constitutionalassembly.lk)

எவ்வாறிருப்பினும் இறுதியாக 18 ஜூலை 2018 அன்று நடைபெற்ற வழிப்படுத்தும் குழுக் கூட்டத்தில் நிபுணர் குழுவினால் இரண்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. வழிப்படுத்தும் குழு அவற்றை ஆராய்ந்ததைத் தொடர்ந்து, ஆவணங்களின் உள்ளடக்கத்தினை நிபுணர் குழு கலந்தாலோசித்து வேறுபாடுகள் இருப்பின் அவற்றினையும் ஆராய்ந்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நிபுணர் குழுவின் இணக்கப்பாடுகளை ஒரே ஆவணத்தில் உள்ளடக்கி சமர்ப்பிக்குமாறு பணித்தனர்.

வழிப்படுத்தும் குழுவின் அடுத்த கூட்டத்திற்கான திகதி முடிவு செய்யப்பட்டதும் அது அரசியலமைப்புச் சபையின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும். நிகழ்நிலைப்படுத்தல்களை அறிய அரசியலமைப்புச் சபையினை ட்விட்டர் வலைத்தளைத்தில் (https://twitter.com/constassemblysl) தொடரவும்.

இது தொடர்பான விளக்கங்களை உள்ளடக்கி அரசியலமைப்புச் சபையின் மேலதிக செயலாளர் ITN தொலைக்காட்சிக்கு அளித்த ( 19 ஜூலை 2018 அன்று செய்திகளின் போது ஒளிபரப்பப்பட்ட) செவ்வியினைக் காண இங்கு அழுத்தவும்