• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழு (பல் கட்சி) 2018 மே மாதம் 24 அன்று கூடியது. குழுவின் அடுத்த கட்ட கலந்துரையாடல்களுக்கு முன்னதாக, தேசிய நிபுணர் குழு ஆவணம் ஒன்றினைத் தயாரிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

அஸ்கிரிய பீடத்தின் அதி சங்கைக்குரிய மஹாநாயக்க தேரரை 2017 ஜுன் 28இல் நடைபெற்ற அரசியலமைப்பு மறுசீராக்கல் பற்றிய மாநாட்டிற்கு அழைத்தமை தொடரர்பான விடயம்:

ph1

இலங்கை அரசியலமைப்புச் சபைச் செயலகம் 2017 ஜுன் 28 ஆம் திகதி புதன்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மீதான ஒரு தேசிய மகாநாட்டை நடாத்தியது. காலை 9.30 மணியில் இருந்து இடம்பெற்ற முழுநாள் மகாநாடு இலங்கை மக்களுக்காக அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களைக் கைக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதற்கு உதவும் பொருட்டு பல்துறைசார் வீச்சிலான பங்காண்மையாளர்களை ஒன்றுகூட்டி வருவதை இலக்காகக் கொண்டிருந்தது. கௌரவ பிரதம அமைச்சர், அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், மாகாண அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைப் பொலிசார், சட்ட மா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அரச நிறுவனங்களிலிருந்து  முக்கிய உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் புலமைசார் உறுப்பினர்கள் என்போரின் பிரசன்னத்தால் இந்நிகழ்வு கௌரவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு மறுசீரமைப்புகள் தொடர்பான எல்லைகடந்த முயற்சிகளின் அங்கமாக இலங்கை அரசியலமைப்புச் சபைச் செயலகம் அரசியலமைப்பு மறுசீரமைப்புகள் பற்றிய தேசிய மாநாடொன்றை 2017 யூன் 28, புதன்கிழமை நடாத்தவுள்ளது. இந்த நிகழ்வானது, கௌரவ பிரதம அமைச்சர், இலங்கை அரசியலமைப்புச் சபைச் செயலக உறுப்பினர்கள், பரவலாகச் சாத்தியப்படும் பங்கேற்பை உறுதிசெய்வதற்கென பலதரப்பட்ட துறைகளிலுள்ள ஏனைய சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரால் சிறப்படையும்.

அரசியலமைப்பு சபையின் கூட்டமொன்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நாளை சனிக்கிழமை மு.ப. 9.00 மணிக்கு பாராளுமன்ற சபையில் நடைபெறவுள்ளது.

 

அன்றைய தினம் வழிநடாத்தற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட உப குழுக்களின் அறிக்கைகளை கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிப்பார்.