• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
 • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

பகிரங்கமாகச் சென்றடையும் நிகழ்ச்சித்திட்டம்

அரசியலமைப்புச் சபையின் பகிரங்கமாகச் சென்றடையும் பக்கத்தை வரவேற்கின்றோம்.
 
இலங்கையின் அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன்மூலம் அது பொதுமக்கள், பகிரங்க அலுவலர்கள், மதகுருமார், பாடசாலைச் சிறார்கள், இளைஞர் மற்றும் ஏனைய பங்கீடுபாட்டாளர்களைச் சென்றடைவதற்கென அரசியலமைப்புச் சபையின் பகிரங்கமாகச் சென்றடையும் நிகழ்ச்சித்திட்டம் இலக்குவைக்கப்படுகின்றது.
 
மேற்சொல்லப்பட்ட பங்கீடுபாட்டாளர்களைச் சென்றடைவதற்கெனப் பயனுறுதிமிக்க, விரிவான பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக செயலமர்வுகளும், பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டதுடன், “பயிற்சியாளர்களைப் பயிற்றுவித்தல்” நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக நாடுபூராவும் நடாத்தப்பட்டது.
 
இந்த நிகழ்ச்சித்திட்டமானது அரசியலமைப்பு மறுசீரமைப்புகள் பற்றிய பொதுமக்கள் கருத்தறியும் குழுவினது செயலாளர் திரு. வின்ஸ்ரன் பத்திராஜ அவர்களினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டு, அரசியலமைப்பு மறுசீரமைப்புகள் பற்றிய பொதுமக்கள் கருத்தறியும் குழுவினது தவிசாளர் திரு. லால் விஜயநாயக்க அவர்களின் தலைமைத்துவத்தின்கீழ் நடாத்தப்பட்டது.
 
அரசியல் மறுசீரமைப்புகள் பற்றிய பொதுமக்கள் கருத்தறியும் குழுவுடன் இணைப்புச் செய்யப்பட்டுள்ள வளவாளர்கள், தற்போதைய அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறையில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரால் தொழில்நுட்ப/விரிவுரை வளவாளர்களின் விளக்கங்களின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நிகழ்ச்சித்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரச துறையில் கிடைக்கும் சாதனங்களின் அடிப்படையில், புதிய அரசியலமைப்பொன்றின் தேவைக்கேற்றவாறு இலங்கையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பின் பின்னணியில் உள்ள விடயம் மற்றும் செயன்முறை பற்றி பங்குபற்றுநர்களுக்கு அறிவூட்டுவதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
 
இலங்கையில் அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறையைச் சூழவுள்ள உரையாடலுடன் தொடர்பாக அதிகளவு தேவைப்படும் விழிப்புணர்வையும் கரிசனையையும் உருவாக்கி பொதுமக்களை ஈடுபடுத்துவதற்கெனச் செயலமர்வுகளின் இறுதியில் வினா – விடை நிகழ்ச்சித் தொடர்கள் சேர்க்கப்பட்டது. இந்த வினா – விடை நிகழ்ச்சித்தொடர்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறை, சிறந்த புரிந்துணர்வைப் பெற்று, அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பான பயனுறுதிமிக்க உரையாடலில் ஈடுபடுதல் மற்றும் நாட்டுக்காகப் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குகின்ற சூழமைவில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்கு வசதியளித்து உதவுகிறது. இத்தகைய பெருமுயற்சிகள் பொதுமக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் தற்போதைய அரசியலமைப்பு மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரலில் மேலதிக உள்ளடக்கத் தன்மையை உருவாக்குதல் ஆகியவற்றின்மீது கவனம்செலுத்தியுள்ளன.
 
 
 

இலங்கையில் அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறைக்கெனப் பங்கீடுபாட்டாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முழு நோக்கத்திற்கிணங்க, பின்வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன:
 • தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) ஒத்துழைப்புடன் இளைஞர் கருத்தரங்கு
 • NYSC இன் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்ட இளைஞர் மாநாடு 2016ஆம் ஆண்டின் இரண்டாம் வாரத்தில் ஆரம்பித்து, நாட்டின் இளைஞர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இலக்குவைக்கப்பட்டது.
   
 • கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் பாடசாலை நிகழ்ச்சித்திட்டம்
 • 2017 சனவரி மாதத்தில் ஆரம்பித்த பாடசாலை நிகழ்ச்சித்திட்டம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் 25 மாவட்டங்களிலும் நடாத்தப்பட்டது. அரசியல் விஞ்ஞானம் அல்லது அரசியலமைப்பு விடயங்களுடன் தொடர்பான பாட ஆசிரியர்களுடன் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பாடசாலையினதும் உயர்தர மாணவர்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பங்குபற்றுநர்களாவர்.
   
 • உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்புடன் பகிரங்க அலுவலர்களின் கருத்தரங்கு
 • பிரதேச செயலாளர்கள், மாவட்டத்திலுள்ள ஏனைய அரசாங்கத் திணைக்களங்களின் பிரதிநிதிகள், அபிவிருத்தி அலுவலர்கள் மற்றும் கிராம சேவை அலுவலர்கள் ஆகிய பகிரங்க அலுவலர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கெனப் பகிரங்க அலுவலர்களின் கருத்தரங்கு இலக்கு வைக்கப்பட்டது.
   
 • நாடு முழுவதிலுமுள்ள சிவில் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பொதுமக்கள் கருத்தரங்கு (சிவில் சமூகம்) மற்றும் சர்வோதய இயக்கத்தின் ஒத்துழைப்புடன் மேலதிகமான சிவில் சமூக நிகழ்ச்சித்திட்டம்
 • மாவட்டச் செயலகங்களின் கலந்தாலோசனையுடன் சிவில் சமூகத்துடனான பொதுமக்கள் கருத்தரங்கு பெயர்பெற்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்களினதும் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள தாபனங்களினதும் பங்கேற்புடன் சம்பந்தப்பட்டது.
   
  அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றி பகிரங்கமாகச் சென்றடையும் முயற்சிகள் தொடர்பாக ஊடக அனுசரணை அடங்கலான தகவல்களையும் சாதனங்களையும் இங்கு அணுகிப் பெற்றுக்கொள்ள முடியும்.