• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
 • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

அரசியமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழு

ரசியலமைப்பு சபையை நியமிப்பதற்கான கட்டமைப்பு தீர்மானத்தின் 05 (அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசியலமைப்புச் சபையின் முதலாவது கூட்டத்தொடரில் 21 அங்கத்தவர்களை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்புச் சபையினால் வழிப்படுத்தும் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான வரைவு பிரேரணை தயாரிப்பினை மேற்கொள்வதும், அரசியலமைப்புச் சபையின் சேவைகளை தன்னகத்தே ஆற்றுவதுமே வழிப்படுத்தும் குழுவின் பிரதான பொறுப்பாக விளங்குகின்றது. அத்துடன் அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவானது அரசியலமைப்பு பிரேரணை வரைவு தயாரிப்பில் முக்கிய பங்கினையாற்றி வருகின்றது. அவ்வகையில் குறிப்பிட்ட பொருத்தமான விடயப்பரப்புக்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றினை சிறப்புற விளக்கும் வகையில் வழிப்படுத்தும் குழுவுக்கு உதவும் வகையில் ஆறு உப குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு 2016 ஏப்ரல் 05 ஆம் திகதி நடைபெற்ற போது அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவுக்கான 21 அங்கத்தவர்களும் நியமிக்கப்பட்டனர். அவ்வகையில் இவ் வழிப்படுத்தும் குழுவுக்கு தலைவராக பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

நியமிக்கப்பட்ட சபையின் வழிப்படுத்தும் குழுவிலுள்ள இருபத்தொரு (21) உறுப்பினர்களும் பின்வருவோர்:-

 

அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு 2016 ஏப்ரல் 07 ஆம் திகதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு பிரேரணை வரைவுச் செயற்பாட்டின் நிமித்தம் பல தரப்பட்ட வகையான தீர்மானங்களை மேற்கொள்ளும் பொருட்டு தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்ற கூட்டத் தொடர்கள் மூலம் அனைத்து பிரதிநிதித்துவ அங்கத்தவர்களாலும் குறிப்பிட்ட விடயப்பரப்புக்கள் குறித்து தங்களது பல தரப்பட்ட கருத்துக்களை முன் வைக்க முடியும். நாட்டின் அரசியலமைப்பு திட்ட வரைவு ஒன்றினை சிறப்பான முறையில் தயார் செய்து நாட்டுக்கு  வழங்குவதே வழிப்படுத்தும் குழுவின் பிரதான செயற்பாடாக விளங்குகின்றது. அத்துடன் அரசியலமைப்புக்கான வரைவு பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையொன்றினையும் இறுதி அறிக்கையொன்றினையும் தயார் செய்து அவற்றினை அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்க வேண்டியதொரு முக்கிய கடப்பாட்டினையும் வழிப்படுத்தும் குழு தன்னகத்தே கொண்டுள்ளது.

அதன் பின்னர், கோட்பாடுகள் மீதான விவாதங்களையும் தகுதிகளையும் அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்புச் சபையினால், இறுதி அறிக்கை ஒன்றையும், அரசியலமைப்பு வரைவு பற்றிய தீர்மானத்தையும் ஒப்புதல் திருத்தங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் அரசியலமைப்புச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஆரம்ப செயற்பாட்டின் போது வழிப்படுத்தும் குழு மற்றும் உப குழுக்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் அரசியலமைப்பு குறித்து அடிப்படையானதும் முக்கியமானதுமான சில தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவ்வகையில், உதாரணமாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமாக இலங்கை அரசியலமைப்பு சார்பான ஆவணங்களைக் குறிப்பிட்டுக் கூறலாம். அவற்றுடன் இணைந்ததாக சிலோன் அரசியலமைப்பு ஆணைக்குழு ஆணை 1946 (சோல்பரி அரசியல்யாப்பு), 1972 இல் இயற்றப்பட்ட முதலாவது குடியரசு யாப்பு, 1978 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பு, 2000 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு வரைவு, புதிய அரசியலமைப்பினை அடிப்படை ரீதியில் வடிவமைக்க அனைத்து கட்சி பிரதிநிதித்துவ குழுவினால் (APRC) மேற்கொள்ளப்பட்ட பிரேரணைகள் ஆகியன அடிப்படை குறிப்புப் பொருளாக சமர்ப்பிக்கப்பட்டன. அடிப்படை உரிமைகள் மீதான புதிய அத்தியாயங்கள் தொடர்பான குழு அறிக்கை, மற்றும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பொது பிரதிநிதித்துவ குழு அறிக்கை மற்றும் பல அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

வழிப்படுத்தும் குழுவினரால் மிக முக்கிய கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்ட விடயப் பொருட்களில் ஒன்றாக பொது பிரதிநிதித்துவ குழுக்களின் அறிக்கை(PRC) விளங்குகின்றது. இவ் அறிக்கைக்கு வழிப்படுத்தும் குழுவினரால் மிக முக்கிய கவனம் செலுத்தப்பட்டு அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதற்கும் மேலாக நடைபெறும் செயல்முறை குறித்து குறிப்பிட்ட விடயப் பரப்புக்களில் சிறந்த ஆய்வுகளும் முன்வைக்கப்பட்டன. பொது பிரதிநிதித்துவ குழு அறிக்கையானது அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த பொதுமக்கள் அனைவரதும் கருத்துக்கள், அபிலாஷைகள் என அனைத்தினையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டதுடன், இப் பொது பிரதிநிதித்துவ குழு அறிக்கையானது இச் செயலகத்தினதும் குழுவினதும் பிரதான தரவுப் பொதியாக அமைந்துள்ளது. அத்துடன் நாட்டு மக்களின் தற்போதய அபிலாஷைகள் மற்றும் எதிர்கால விருப்பங்களையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

வழிப்படுத்தும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இறுதித் தீர்மானத்தினைத் தொடர்ந்து, பொது பிரதிநிதித்துவ குழுவிற்கு பிரதிநிதித்துவம் செய்யாத பொதுமக்களுக்கு, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் நேரடியாக வழிப்படுத்தும் குழுவினருக்கு சமர்ப்பிக்கும் சிறந்ததொரு மேலதிகமான சந்தர்ப்பமொன்று வழங்கப்பட்டது.

அவ்வகையில் வழிப்படுத்தும் குழுவின் பிரதிநிதிகள் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துக்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்காக பத்திரிகை விளம்பரமொன்று மே மாதம் 10 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு அன்று எழுத்துமூல பிரதிநிதித்துவங்கள், வழிப்படுத்தும் குழு உப குழுக்களினால் தீர்மானிக்கப்பட்ட தலைப்புக்களின் கீழ் அனுப்பபடல் வேண்டும் என்ற வகையில் விபரங்கள் அடங்கலாக பிரசுரிக்கப்பட்டது. அவ்வகையில் எழுத்துமூல பிரதிநிதித்துவங்கள் சமர்ப்பிக்கும் கால எல்லையினை 2016 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி வரையாக கால எல்லை நீடிக்கப்பட்டது. அத்துடன் வழிப்படுத்தும் குழுவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட பிரதிநிதித்துவங்கள் பொதுப் பிரதிநிதித்துவங்களுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டன. குழுக்களினுடைய பரிசீலணையின் பொருட்டு, மேலதிகமாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களை தவிர அதற்கு அப்பால் வழிப்படுத்தும் குழு, அனைத்து அரசியல் கட்சிகள், தொழில் ரீதியான நிறுவனங்கள், அனைத்துக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் தத்தமது எழுத்து மூல பிரதிநிதித்துவங்களை சமர்ப்பிக்கும் படி வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

அவ்வகையில் குழுக்களின் மூலம் பெறப்பட்ட பிரதிநிதித்துவங்கள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த கவனிப்பின் பொருட்டு குறிப்பிடப்பட்ட பொருத்தமான உப குழுக்களுக்கு முன்வைக்கப்பட்டன. அதற்கு மேலதிகமாக, வழிப்படுத்தும் குழு ஆரம்ப ஆய்வுகளின் போது, அரசியல் கட்சி மற்றும் மாகாண மட்ட பிரதிநிதித்துவங்களைச் சேர்ந்தவர்கள் உதாரணமாக, ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு இக் குழுவின் முன் வந்து தமது கருத்துக்களை வௌிப்படுத்தும் வகையில் சிறந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அவ்வகையில் அந்தந்த துறைகளின் உப குழுக்களுக்கு முன்னிலையில் தமது வாய்மூல சமர்ப்பிப்புக்களை வழங்கும் வகையில் அவர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அவ்வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்குமான வாய்மூல மற்றும் எழுத்து மூல சமர்ப்பிப்புக்களை வழங்குவதற்கான கால எல்லை வழங்கப்பட்டு பின்னர் அவர்களுக்கான தேவைகளின் பொருட்டு கால எல்லை நீடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறை ரீதியிலும் அரசியல் கட்சி பிரதிநிதித்துவங்கள் தமது சமர்ப்பிப்புக்களை அரசியலமைப்பு சபை செயலகத்திடம் சமர்ப்பித்தனர்.

வழிப்படுத்தும் குழு அரசியலமைப்புச் சபையினால் நியமனம் செய்யப்பட்ட உப குழுக்களுடன் இணைந்து குறிப்பிட்ட விடயப் பரப்புக்களில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதுடன், விவாதத்தின் போது முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் பரிசீலித்து அரசியலமைப்பு சபையின் பரிசீலனைக்கு இறுதி அறிக்கை ஒன்றையும் அரசியலமைப்பு வரைவை உள்ளடக்கிய தீர்மானத்தையும் சமர்ப்பிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது. அத்துடன், புதிய அரசியலமைப்பின் கணிசமான பல்வேறு அம்சங்களில், சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றினை பரிசீலித்து திருத்தியமைப்பதற்காகவும், அரசியலமைப்பு பிரேரணை வரைவு செயற்பாடு வழிப்படுத்தும் குழுவினரால் மேற்கொள்ளப்படுகின்றது.

அவ்வகையில் கீழ்வரும் தலைப்புக்களின் கீழ் கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்மானம் மெற்கொள்ளவென வழிப்படுத்தும் குழுவினரால் தன்னகத்தே தீர்மானிக்கப்பட்டது.

•தற்போதய அரசியல் யாப்பின் முதலாவது மற்றும் இரண்டாவது அத்தியாயம் தொடர்பில்     கலந்துரையாடல்
• நாட்டின் தன்மை
• இறையாண்மை
• மதம்
• அரசாங்கத்தின் கட்டமைப்பு
• தேர்தல் சீர்திருத்தங்கள்
• அதிகாரப் பகிர்வுக்கான கோட்பாடுகள்
• காணி

 

அவ்வகையில் வழிப்படுத்தும் குழுவானது தமது கூட்டங்களின் போது தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் அவதானமான கவனத்தினை செலுத்தி அது தொடர்பில் திருத்தமான கருத்துக்களை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வழிப்படுத்தும் குழுவினரால் ஆழமாக கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவுகளை இயற்றுவதற்காக எடுக்கப்பட்ட துறைகளில் தேர்தல் சீர்திருத்தம் என்ற பிரிவு முக்கிய இடம் வகிக்கின்றது. அத்துடன் இலங்கைக்கான புதிய தேர்தல் முறைமையை அனைவரதும் ஏகமனதுடன் ஏற்று அதன் மூலம் கருத்துக்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம் அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு தேர்தல் சீர்திருத்த முறைமையை முன்வைக்க முடியும். இவ்வாறான தேர்தல் சீர்திருத்தத்தினை முன்வைப்பதன் மூலம், ஜனநாயக பிரதிநிதித்துவம் மற்றும் அந்தந்த தேர்தல் தொகுதிகளில் உள்ள பிரதிநிதிகள் நேரடி பொறுப்புக் கூறலுக்கான பொறுப்பினையும் தம்மகத்தே கொண்டு விளங்கும் தன்மையை மேம்படுத்தும். அத்துடன் நாட்டின் தன்மை, அரசாங்கத்தின் கட்டமைப்பு, இறையாண்மை, மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற ஏனைய முக்கிய பிரிவுகளும் இவ்வாறான பரப்புக்களில் வழிப்படுத்தும் குழுவினரால் மேற்கொள்ளப்படும்.

இலங்கையில் அரசியலமைப்பு கட்டமைப்பு தீர்மானத்தின் படி அரசியலமைப்பு பிரேரணை வரைவினை தயார் செய்யும் பொருட்டு வழங்கப்பட்ட அனைத்து துறைகளிலும் மற்றும் துறை ரீதியான ஆய்வுகளிலும் அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவானது கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், தொடர்ந்து கூட்டத்தொடர்களை ஏற்பாடு செய்து அது தொடர்பான ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

அவ்வகையில், வழிப்படுத்தும் குழுக்களுக்கு உதவும் வகையில் ஆறு வெவ்வேறு தொனிப் பொருட்களின் அடிப்படையில் செயற்படும் விதத்தில் அவற்றுக்கு வேண்டிய ஆறு உபகுழுக்களானது அரசியலமைப்பு சபையினால் நியமனம் செய்யப்பட்டது. அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மற்றும் மத்திய அரசாங்கம் - மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு ஆகியனவே ஆறு வெவ்வேறு தொனிப் பொருட்களாக வகுக்கப்பட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் குறித்த வழிப்படுத்தும் குழுக்கள் அரசியலமைப்பு கோட்பாடுகளின் மீதான முதலாவது வரைவு உள்ளிட்ட தமது (இடைக்கால) அறிக்கையினை எதிர்வரும் நவம்பர் மாதம் அரசியலமைப்புச் சபைக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

கட்டமைப்பு தீர்மானத்தின் அடிப்படையில், அரசியலமைப்புச் சபைக்கு இறுதி அறிக்கையானது "அரசியலமைப்புத் திட்ட வரைவு" உள்ளடங்கலாக நாட்டிற்கான அரசியலமைப்பின் உண்மையான விளக்கங்கள், பொருளடக்கங்களை உள்ளடக்கி வழங்கப்படவுள்ளது. அரசியலமைப்பு திட்ட வரைவு மற்றும் வழிப்படுத்தும் குழுவின் இறுதி அறிக்கை அரசியலமைப்புச் சபையின் விவாதங்களுக்காகவும் ஆழ்ந்த ஆய்வுகளுக்காகவும் விடயப்படுத்தப்படும்.

அத்துடன் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களினதும் பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை குறிப்பிட்ட பரந்த விடயப்பரப்புக்களில் தயார் செய்யப்படும் அரசியலமைப்பு கொள்கைகளுக்கான விடயத்துக்கான சிறந்த கொள்கை வகுப்பாக வழிப்படுத்தும் குழுவினரால் எடுத்துக் கொள்ளப்படும்.

அத்துடன் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரியுமான திரு. நீல் இத்தவல
Mr Neil Iddawala 247x300தற்போது பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகவும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றும் திரு. நீல் இத்தவல, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பட்டதாரியாவார். அத்துடன் தொழில்முறை ரீதியாக சட்டத்துறை வழக்கறிஞராகவுமுள்ளார். 1988 ஆம் ஆண்டில் நெசவு சார் மாநகராட்சி மன்றத்தில் சட்ட உதவியாளராக இவர் பணியாற்றினார். மேலும் 1988 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாவட்ட சட்டத்தரணிகள் மூலம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்துறை வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டில் நீதித்துறையில் இணைந்து கொண்டார். அன்றிலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை மாவட்ட மேலதிக நீதிபதியாக பணியாற்றி பின்னர் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார். அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட இவர், பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக 2012 இல் நியமனம் பெற்றார். பாராளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளையும் மேற்பார்வை செய்யும் பணிகளை மேற்கொண்ட பின்னர், தற்போது பாராளுமன்ற அனைத்து விவகாரங்களிலும் சுமார் 13 வருட கால அறிவு, அனுபவத்தினையும் இவர் கொண்டுள்ளார்.
அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் செயலாளராக விளங்கி அதற்கான சேவையை தன்னகத்தே ஆற்றுவதோடு, நடைபெறும் வழிப்படுத்தும் குழுவின் கூட்டங்களில் பேச்சாளராகவும் தனது பங்கினையாற்றுகின்றார்.
 

வழிப்படுத்தும் குழுவின் பணிகளை விரிவாக்கவும், ஒழுங்கான எற்பாடுகளை மேற்கொள்ளவும் அவற்றினை முகாமை செய்யும் வகையில் முகாமைத்துவ குழுவொன்று வழிப்படுத்தும் குழுவின் இரண்டாவது கூட்டத்தொடர் 28 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போது நியமனம் செய்யப்பட்டது. இந்த முகாமைத்துவ குழுவானது வழிப்படுத்தும் குழு, உப குழுக்கள், மற்றும் அலுவலகர்கள் தேவைகள் உட்பட்ட பணிகளையும் கவனத்தில் கொண்டு சேவையாற்ற வேண்டும்.

அவ்வகையில் முகாமைத்துவ குழுவுக்கான அங்கத்தவர்களாக பின்வருவோர் நியமனம் செய்யப்பட்டனர்
  • கௌரவ. (டாக்டர்.) ஜயம்பதி விக்கிரமரத்ன (இணைத் தலைமை)
  • கௌரவ.எம்.ஏ.சுமந்திரன் (இணைத்தலைமை)
  • நீல் இத்தவல தலைமை அலுவலர், பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம், மற்றும் வழிப்படுத்தும் குழுவின் செயலாளர்.
  • அப்துல் நௌபர் ரஹ்மான் பாராளுமன்ற சபைத் தலைவரின் செயலாளர்
  • திருமதி.பிம்பா திலகரத்ன ஜனாதிபதி சட்டத்தரணி, பிரதமரின் மேலதிக செயலாளர்