• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

அரசியலமைப்புச் சபையின் உப குழுக்கள்

ரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகளுக்கேற்ப வழிகாட்டும் குழுவுக்கு உறுதுணையாக விளங்கும் வகையில் அரசியலமைப்புச் சபையினால் உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் அரசியலமைப்புச் சபை 2016 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி ஆறு தொனிப்பொருள்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு உப குழுக்களை நியமித்தது. அவ்வகையில் நியமிக்கப்பட்ட ஆறு குழுக்களும் வருமாறு
 
ஆகியனவே இவ் தொனிப் பொருட்களாக கருதப்பட்டன.

 

அவ்வகையில் ஒவ்வொரு உப குழுக்களும் அக்குழுவின் தலைவர்களை உள்ளடக்கிய வகையில் 11 அங்கத்தவர்களைக் கொண்ட வகையில், அரசியலமைப்புச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட வழிப்படுத்தும் குழுவினரால் நியமிக்கப்பட்டது. பாராளுமன்றத்தினுள் காணப்படும் கட்சி பிரதிநிதித்துவங்கள் மற்றும் அரசியல் கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்குமான சமத்துவமான முறையிலேயே இவ் உப குழுக்களுக்கான அங்கத்தவர்களின் நியமனம் அமைந்திருந்தது.

ஆறு உப குழுக்களுக்குமான ஆறு தலைவர்களும் உப குழுவின் அங்கத்தவர்களிலிருந்து பதவியின் சிரேஷ்ட பரிசீலணையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அத்துடன் உப குழுக்களுக்கான நிர்வாக ஆதரவுகளை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் இவ் உப குழுக்களுக்கான செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  விடயப் பரப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை உள்ளடக்கி உப குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கைகள், வழிப்படுத்தும் குழுவினால் அரசியலமைப்பு பிரேரணை வரைவு என வழங்கப்படும்.  கட்டமைப்பு தீர்மானத்தின் அடிப்படையில், அரசியலமைப்புச் சபைக்கு இறுதி அறிக்கையானது "அரசியலமைப்புத் திட்ட வரைவு" உள்ளடங்கலாக நாட்டிற்கான அரசியலமைப்பின் உண்மையான விளக்கங்கள், பொருளடக்கங்களை உள்ளடக்கி வழங்கப்படவுள்ளது.

விடயப்பரப்புக்கள் குறித்து கலந்துரையாடல்களை மேம்படுத்தும் பொருட்டு ஆறு உப குழுக்களும் சுயாதீனமாக செயற்பட்டன. அவ்வகையில் ஒவ்வொரு கலந்துரையாடல்களை ஒழுங்குபடுத்துவதும், பிரதிநிதித்துவங்களை வரவழைப்பதும் உப குழுக்களினால் மேற்கொள்ளப்படுகின்றது.  ஆறு  உப குழுக்களினதும் கலந்துரையாடல்களானவை இயற்கை ரீதியிலான ஆலோசனைக் கருத்துக்களாகும். அத்துடன் குறிப்பிடப்பட்ட ஆறு வெவ்வெறு விடயப் பரப்புக்களிலும் உள்ள அறிவு ரீதியான கருத்துக்களை, அனுபவங்களை, ஒழுங்கான முறையில் பகிர்ந்து கொண்டு விடயப்பரப்புக்களை முன்னோக்கி கொண்டு செல்லும் பொருட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை உள்ளடக்குவது இந்த ஆறு உப குழுக்களினதும் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. துறை ரீதியில் தனிப்பட்ட நபர்கள், ஆர்வமுள்ள குழுவினர், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோர் வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் குறிப்பிட்ட விடயப் பரப்புக்களில் தமது கருத்துக்களை சமர்ப்பிப்புக்களை ஒவ்வொரு உப குழுக்கள் முன்னிலையிலும் சமர்ப்பிப்பதற்காக வரவழைக்கப்பட்டனர். அவ்வகையில் அரசியல் கட்சிகள், மாகாண பிரதிநிதிகள் மற்றும் தனிப்பட்ட குழுக்களின் மூலமாக வழிப்படுத்தும் குழுவினரால் பெறப்பட்ட சமர்ப்பிப்புக்களை ஆராயும் பொருட்டு உப குழுக்களிடத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவற்றினால் ஆராயப்பட்டன.

வழிப்படுத்தும் குழுவின் உத்தரவின் பேரில் பொது பிரதிநிதித்துவ குழு (PRC) செயற்பாட்டினூடாக பெறப்பட்ட பொதுமக்கள் கருத்துக்களுக்கும் வாய்மூல மற்றும் எழுத்து மூல சமர்ப்பிப்பு க்களும் அடங்கிய இரண்டு அறிக்கைகளும் விசேட கவன ஆய்வின் பொருட்டு உப குழுக்களின் கவனத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன் பொது பிரதிநிதித்துவ குழுவின் தலைவர் மற்றும் செயலாளர்களது பரிந்துரைகளின் படி பொது பிரதிநிதித்துவ அங்கத்தவர்களும் ஆறு உப குழுக்களினது நிபுணர்களாக பணியாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களுக்கும் ஆதரவினையும் ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் எட்டு அங்கத்தவர்களை உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்று அரசியலமைப்பு சபையினால் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 அம் திகதி நடைபெற்ற கூட்டத் தொடரில் வைத்து ஒருங்கிணைவின் ஒரு நடவடிக்கையாக, வழிப்படுத்தும் குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. இதற்கும் மேலதிகமாக பல மேதைகளும், நிபுணர்களும் உப குழுக்களின் தீர்மானத்தினால் சுயாதீனமாக வரவழைக்கப்பட்டனர்.

அரசியலமைப்பு சபையின் நிபுணர்களினால் செய்யப்பட்ட விடய ரீதியான செயற்பாடுகள் உப குழுக்களின் செயற்பாடுகளுக்கு அண்மையாக அடையக்கூடிய அளவில் காணப்படுவதுடன், இவ் விடய ரீதியான செயற்பாடுகள், உப குழுக்களின் வட்ட மேசை மாநாடுகளின் மூலம் அடையப்பட்டதாகவும் காணப்படுகின்றது. (அரசியலமைப்பு சபை செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வகையில்).

இதன் மூலம் குறிப்பிட்ட விடயங்கள் ரீதியில் உப குழுக்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள், உப குழுக்களின் கூட்டத்தொடர்கள் கலந்துரையாடல்களின் போதும் குறித்த விடயங்கள் தொடர்பில் பல தரப்பட்ட கருத்துக்களை முன்வைத்து தமது பங்களிப்புக்களை வழங்க முடியும். இதன் மூலமாக அந்த நிபுணர்கள் அரசியலமைப்பு சபையின் விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்ட உப குழுக்களால் தயாரிக்கப்படும் இறுதி அறிக்கைகளுக்கு ஆதரவாக விளங்குகின்றனர். உபகுழுக்களின் அமர்வுகளின் ஆரம்பத்தில் அவற்றின் சுருக்கங்கள் அடங்கிய அறிக்கையானது வழிப்படுத்தும் குழுவின் அங்கீகாரத்துடன் ஒவ்வொரு உப குழுக்களுக்கும் அவற்றின் அங்கத்தவர்களுக்கும் ஆழ்ந்த கவனிப்பின் பொருட்டு வழங்கப்பட்டது.

வழிப்படுத்தும் குழுவினரால் நேரத்துக்கு நேரம் வடிவமைக்கப்பட்ட கொள்கைககள் மற்றும் வழிமுறைகள் அனைத்தும் ஆழ்ந்த அவதானிப்பின் பொருட்டு உப குழுக்களுக்கு முன்னிலையாக சமர்ப்பிக்கப்பட்டன. சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவ்வனைத்தும் உப குழுக்களின் தலைவர்களுக்கு உரிய முறையில் பரிமாறப்பட்டு ஆராயப்பட்டன. அவ்வகையில் பரிமாறப்பட்ட அனைத்து அறிக்கைகளும் உப குழுக்களின் தலைவர்களால் ஆழ்ந்து ஆராயப்பட்டன. அவற்றுள் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் மற்றும் பிரதிநிதித்துவங்களால் பெறப்பட்ட சமர்ப்பிப்புக்களும் அடங்கும். அவ்வகையில் வழிப்படுத்தும் குழுவுக்கும் உப குழுக்களுக்கும் இடையிலான பாலமாக அரசியலமைப்புச் சபை செயலகம் செயற்பட்டு வருகின்றது.

அவ்வகையில் அரசியலமைப்புச் செயலகத்தின் ஆய்வுக் குழுவினர்களும், இவ் உப குழுக்களுக்கு தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.  குறிப்பிட்ட விடயப் பரப்புக்கள் மீதான ஒப்பீட்டு ரீதியான ஆய்வுச் சுருக்கம், மற்றும் சிறந்த சர்வதேச நடைமுறைகள் குறிப்பிட்ட தலையங்களின் கீழ் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி , பொதுச் சேவை மற்றும் , மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான உறவு ஆகியவற்றினை விளக்கும் வகையில் ஆதரவு வழங்கும் வகையிலும் தொகுக்கப்பட்டது. அவ்வகையில் இவ்வாறு தொகுக்கப்பட்ட ஆய்வின் சுருக்கங்கள், குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் நிபுணர்கள் குழுக்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்பட்டன. இவை அவசியம் ஏற்படும் போதோ அல்லது உலகளாவிய ரீதியில் எடுத்துக்காட்டுக்களுடன் ஒப்பிட்டு நோக்கும் போது  விடயப்பரப்புக்களுடன் ஆராய்ந்து பயன்படுத்த முடியும்.   உப குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை, கலந்துரையாடல் மற்றும் ஆழ்ந்த ஆய்வு என்பன வழிப்படுத்தும் குழுவின் இறுதி அறிக்கை தயாரிப்பின் போது மிக உன்னத ஆதரவினை வழங்கும். அவ்வகையில் இறுதி அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள், அரசியலமைப்பு சபையின் குறித்த விடயப் பரப்புக்கள் குறித்த கவனத்தின் பொருட்டு அரசியலமைப்பு பிரேரணை வரைவு என்ற நிலையில் உப குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் உட்பட்ட இறுதி அறிக்கைகள் வழிப்படுத்தும் குழுவினரால் கவனத்தில் கொள்ளப்படும்.