• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

அரசியலமைப்புச் சபை

ரசியலமைப்புச் சபைக்கான கட்டமைப்புத் தீர்மானமானது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி இலங்கையின் அரசியலமைப்பு  பற்றிய மக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று அவற்றைப் பற்றிக் கலந்தாராய்ந்து அரசியலமைப்பு சட்டமூலத்தின் வரைவைத் தயாரிக்கும் நோக்கத்துக்காக 'அரசியலமைப்புச் சபை' என அழைக்கப்படும் அனைத்து 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய பாராளுமன்றக் குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.

அவ்வகையில் அரசியலமைப்புச் சபையின் தலைவராக, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் நியமிக்கப்பட்டார். அரசியலமைப்புச் சபையின் முதலாவது அமர்வின் போது ஏழு (07) பிரதித் தவிசாளர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவ சபாநாயகர் இல்லாத சந்தர்ப்பங்களில் சபைக் கூட்டங்களில் இவர்களுள் ஒருவர் தலைமை வகிப்பர். இருபத்தொரு (21) உறுப்பினர்களைக் கொண்ட வழிப்படுத்தும் குழு நியமிக்கப்பட்டதுடன், இலங்கையின் பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழிப்படுத்தும் குழுவின் தவிசாளராக ஏகமனதாக நியமிக்கப்பட்டார். அரசியலமைப்பு சபையின் கூட்டங்களுக்காக கூட்ட நடப்பெண் இருபது ஆக இருக்க வேண்டும். அத்துடன் இது தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற அமர்வுகள் அனைத்தும் பாராளுமன்றத்திலேயே நடைபெறும்.

அரசியலமைப்பு சபை தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளும் பொதுமக்களுக்கு வெகு சுலபமாக அணுகக்கூடியதாகவே காணப்படும். அரசியலமைப்பு  சபைக்கு தேவையெனக் கருதும் சந்தர்ப்பங்களில் எந்தவொரு துறையின் அல்லது துறைசார்ந்த நிபுணர்களை அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கவும் அழைக்கவும் முடியும்.  அதற்கேற்ப அரசியலமைப்புக்கு தேவையான நிபுணர்களின் குழு மே மாதம் 05 ஆம் திகதி அரசியலமைப்புச் சபையினால் குழுக்களின் பல்வேறுபட்ட நிலமைகள் நிலவரங்கள் தொடர்பில் உதவிகளை வழங்கவும், ஆலோசனை வழங்கும் வகையிலும் நியமனம் செய்யப்பட்டது. (உரிய இணைப்பினை வழங்கவும்)

அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு 2016 ஏப்ரல் 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது. சபையின் முதலாவது அமர்வின் போது, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் தலைமை தாங்கினார். அரசியலமைப்புச் சபையின் முதலாவது அமர்வின் போது ஏழு (07) பிரதித் தவிசாளர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவ சபாநாயகர் இல்லாத சந்தர்ப்பங்களில் சபைக் கூட்டங்களில் தலைமை வகிப்பர். அவ்வகையில் தெரிவு செய்யப்பட்ட சபையின் ஏழு (07) பிரதித் தவிசாளர்களும் பின்வருவோர்:-

 

அத்துடன் கட்டமைப்புத் தீர்மானத்துடன் இணைந்த வகையில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழிப்படுத்தும் குழுவொன்று அரசியலமைப்புச் சபை பிரேரணை வரைவுத் தீர்மானத்திற்கான தயாரிப்பின் நிமித்தம் நியமிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி இருபத்தொரு (21) உறுப்பினர்களைக் கொண்ட வழிப்படுத்தும் குழு நியமிக்கப்பட்டதுடன், இலங்கையின் பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழிப்படுத்தும் குழுவின் தவிசாளராக ஏகமனதாக நியமிக்கப்பட்டார். பாராளுமன்றத்திலுள்ள பொது அரசியல் கட்சிகளின் தலைமைத்துவத்தினை பிரதிபலிக்கும் வகையில் அவ் 21  அங்கத்தவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்புச் சபையின் உரிய கவனத்துக்காக தயாரிக்கப்படும் அரசியலமைப்பு பிரேரணை வரைவு செயற்பாட்டின் போது, வழிப்படுத்தும் குழுவுக்கு உதவும் வகையில் ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டது. இவ் ஆறு உப குழுக்களும் அரசியமைப்புச் சபையினால் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. (பொருத்தமான இணைப்பினை வழங்கவும் – ஹன்சார்ட்).

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபை வழிப்படுத்தும் குழுவானது அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி,  பொதுச் சேவை மற்றும் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு ஆகிய விடயங்களை ஆராய்வதற்கு ஆறு உப குழுக்களை ஏற்படுத்தியுள்ளது. (பொருத்தமான பக்கங்களுக்கான உரிய இணைப்பினை வழங்கவும்).

விடயப் பரப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை உள்ளடக்கி உப குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கைகள், வழிப்படுத்தும் குழுவினால் அரசியலமைப்பு பிரேரணை வரைவு என வழங்கப்படும்.

கட்டமைப்பு தீர்மானத்தின் அடிப்படையில், அரசியலமைப்புச் சபைக்கு இறுதி அறிக்கையானது "அரசியலமைப்புத் திட்ட வரைவு" உள்ளடங்கலாக நாட்டிற்கான அரசியலமைப்பின் உண்மையான விளக்கங்கள், பொருளடக்கங்களை உள்ளடக்கி வழங்கப்படவுள்ளது.

அவ்வகையில் குறித்த வழிப்படுத்தும் குழுக்கள் அரசியலமைப்பு கோட்பாடுகளின் மீதான  முதலாவது வரைவு உள்ளிட்ட தமது (இடைக்கால) அறிக்கையினை எதிர்வரும் நவம்பர் மாதம் அரசியலமைப்புச் சபைக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.  அதன் பின்னர், கோட்பாடுகள் மீதான விவாதங்களையும் தகுதிகளையும் அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்புச் சபையினால், இறுதி அறிக்கை ஒன்றையும், அரசியலமைப்பு வரைவு பற்றிய தீர்மானத்தையும் ஒப்புதல் திருத்தங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் அரசியலமைப்புச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பு திட்ட வரைவு மற்றும் வழிப்படுத்தும் குழுவின் இறுதி அறிக்கை அரசியலமைப்புச் சபையின் விவாதங்களுக்காகவும் ஆழ்ந்த ஆய்வுகளுக்காகவும் விடயப்படுத்தப்படும். அரசியலமைப்புச் சபை அரசியலமைப்பு வரைவு பற்றிய தீர்மானத்தை சாதாரண பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்படுமிடத்து அறிக்கையும் மற்றும் அரசியலமைப்பு வரைவும் வழிப்படுத்தும் குழுவினால் அமைச்சரவை அமைச்சர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையும் உப குழுக்களும் கலைக்கப்பட்டதாகக் கருதப்படல் வேண்டும். அரசியலமைப்புச் சபை கலைக்கப்பட்டதனைத் தொடர்ந்து "அரசியலமைப்பு பிரேரணை மீதான தீர்மானம்" பாராளுமன்றத்தின் கவனத்திற்காக அரசாங்க சட்டமூலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

அதற்கமைவாக 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சாசனத்துக்கு நடைபெற்ற வாக்கெடுப்பு போன்று உத்தியோகபூர்வ வாக்கெடுப்புக்கள் இடம்பெற்று இலங்கை நாட்டுக்கான புதிய அரசியலமைப்பு உத்தியோகபூர்வமாக இயற்றப்பட வேண்டும்.  அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாடுகளுக்கு ஆதரவுகளை வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சபைக்கான மேலதிக செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம் தொடர்பில் கட்டமைப்பு தீர்மானம் வழங்குகின்றது (பொருத்தமான பக்கத்துக்கு இணைப்பினை வழங்கவும்). அரசியலமைப்புச் சபைக்கான மேலதிக செயலாளர் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி நியமனம் செய்யப்பட்டார். அத்துடன் அரசியலமைப்புச் சபையின் அலுவல்கள் விவகாரங்களுக்கான செயலகம் பாராளுமன்ற வளாகத்திலேயே தொழிற்படும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

அதிகாரபூர்வ அறிக்கை - அரசியலமைப்புச் சபையின் முதலாவது கூட்டம்

அதிகாரபூர்வ அறிக்கை - அரசியலமைப்புச் சபையின் இரண்டாவது கூட்டம்

அதிகாரபூர்வ அறிக்கை - அரசியலமைப்புச் சபையின் மூன்றாவது கூட்டம்

அதிகாரபூர்வ அறிக்கை - அரசியலமைப்புச் சபையின் நான்காவது கூட்டம்

அதிகார அறிக்கை - அரசியல் பேரவையின் 6வது கூட்டம்

உத்தியோகபூர்வ அறிக்கை - அரசியலமைப்புச் சபையின் 11 ஆவது கூட்டம். 11.01.2019