• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
 • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

அரசியலமைப்புச் சபையின் செயலகம்

ரசியலமைப்புச் சபையின் செயலகமானது (CAS) அரசியலமைப்புச் செயற்பாட்டுக்கென வழிப்படுத்தும் குழுவினரால் நிர்மானம் செய்யப்பட்ட பெரிதும் முக்கியமான நிர்வாக அலகாக விளங்கி வருகின்றது. அரசியலமைப்பு செயலகமானது பாராளுமன்ற செயலகத்தினுள் செயற்பட்டு வருவதுடன் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக தம்மிக்க தஸாநாயக்க விளங்குவதுடன் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக திரு. நீல் இத்தவல விளங்குகின்றார்.
 
அரசியலமைப்புச் சபை செயலகத்தின் செயற்பாடுகளுக்கான அலுவலகம், அரசியலமைப்பு பிரேரணை கட்டமைப்பு தீர்மானத்தின் வாசகம் 4 (அ) வில் குறிப்பிடப்பட்டவாறான அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் மேலதிக செயலாளரின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுவதுடன், அரசியலமைப்புச் செயலகத்துக்கேயுரியதான ஆய்வு மற்றும் ஊடக  அலுவலக பணியாளர்களை கொண்டு விளங்குகின்றது.  அவ்வகையில் அரசியலமைப்புச் சபையின் இரண்டாவது அமர்வின் போது 05 ஆம் திகதி மே மாதம் 2016 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சபைச் செயலகத்துக்கான மேலதிக செயலாளராக திருமதி யுரேஷா பெர்னான்டோ
திருமதி யுரேஷா பெர்னான்டோ சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச வழக்குரைஞராக விளங்குவதுடன் சட்ட வழக்கறிஞராக பணியாற்றி சுமார் 14 வருட அநுபவத்தினையும் தன்னகத்தே கொண்டுள்ளார். அரசியலமைப்புச் சபையின் மேலதிக செயலாளராக பதவி நியமனம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இத்தகைய முறையில் சேவையாற்ற சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அனுமதியுடன் வௌியிடப்பட்டார்.
 
வழிப்படுத்தற் குழுவின் இரண்டாவது கூட்டம் 28 ஏப்பிரல் 2016 ஆந் திகதி இடம்பெற்றது. அக் கூட்டத்தில் முகாமைத்துவக் குழு ஒன்று நியமனம் செய்யப்பட வேண்டுமென்று கருத்திற் கொள்ளப்பட்டது. அக் குழுவானது அரசியலமைப்புச் செயலகத்தின் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன் அதன் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் உதவிபுரியும். முகாமைத்துவக் குழுவிற்கு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களின் விபரம் பின்வருமாறு:
 • கௌரவ.(டாக்டர்) ஜயம்பதி விக்கிரமரத்ன. பா.உ. – இணை.தவிசாளர்.
 • கௌரவ. எம்.ஏ.சுமந்திரன்.பா.உ.– இணை.தவிசாளர்.
 • நீல் இத்தவல. பதவியணி பிரதானியும், பாராளுமன்ற பொதுசெயலாளர் நாயகமும் மற்றும் வழிப்படுத்தற் குழுவின் செயலாளரும்.
 • நவ்பல் அப்துல் ரஹ்மான்.  சபைமுதல்வரின் செயலாளர்.
 • திருமதி. பிம்பா ஜயசிங்க திலகரத்ன. PC, கௌரவ பிரதம அமைச்சரின் மேலதிகசெயலாளர் (சட்ட அலுவலர்கள்).
 
சட்ட மா அதிபர் திணைக்களங்களுக்கு வழங்கப்படும் அரசியலமைப்பு சட்டமூலங்களை பரிசீலிக்கும் வகையில் இவர் விரிவான முறையில் தனது பணிகளை ஆற்றியுள்ளார். அத்துடன் 19 ஆவது அரசியலமைப்பு சட்டமூல வரைவு திருத்தத்தின் பொருட்டு நியமனம் செய்யப்பட்ட நான்கு அங்கத்தவர்களை கொண்ட குழுவொன்றிற்கான ஆலோசகராகவும் இவர் செயற்பட்டுள்ளார். அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான பிரதமரது அலுவலகத்தின் குழுவின் உறுப்பினராகவும் இவர் மேலும் செயற்பட்டார். அத்துடன் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வௌிவிவகார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட நல்லிணக்கம் மீதான உள்ளக அமைச்சரவைக் குழுவின் அங்கத்தவராகவும் பணியாற்றியவராவார்.
 
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம், சர்வதேச தொடர்புகள் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தனது இளங்கலைமாணிப்பட்டத்தினைப் (BA) பெற்ற திருமதி யுரேஷா அதனைத் தொடர்ந்து சட்டத்துறையில் முதுகலைமானிப்பட்டத்தினைப் (LLM)லண்டன் பல்கலைக்கழகத்தில் (UCL)பெற்றார். அங்கு கல்வி பயிலும் போது பொது சர்வதேச சட்டத்துறையில் ஒப்பீட்டு ரீதியான அரசியலமைப்பு சட்டத்துறையில் பிரதான சர்வதேச ஆய்வாளராக மிளிர்ந்தார். "ஆசியாவின் 21 இளம் தலைவர்கள்" (2013) பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார். அத்துடன் லண்டன் சர்வதேச ஆய்வாளர் (UK),சட்டமியற்றுவதற்கு இணையாணவர் (U.S)என்பதுடன் மற்றும் 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற "சர்வதேச இளையோர் இணையத்தள கூட்டுறவு வடிவமைப்பு பட்டறை"க்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவராகவும் திருமதி யுரேஷா விளங்குகின்றார். அரசியலமைப்புச் செயலகப் பணியாளர் குழாம், பாராளுமன்ற உத்தியாகத்தர்கள் மற்றும் பிரதம அமைச்சரின் அலுவலகத்தால் வழிமொழியப்பட்ட உத்தியோகத்தர்களை உள்ளடக்கியுள்ளது. வழிப்படுத்தற் குழு மற்றும் உப குழுக்களின் அரசியல் மறுசீரமைப்பு முறைகள்  தொடர்பான ஆவணங்கள் அனைத்து மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளும் பாராளுமன்றப் பொருள்கோடல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டது.
, நியமிக்கப்பட்டார்.
 
அரசியலமைப்புச் சபையின் செயலகமானது அரசியலமைப்புச் சபையின் ஒவ்வொரு குழுக்களுக்கிடையேயுமான இணைப்புப் பாலமாக விளங்குகின்றது. அதாவது அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழு, மற்றும் உப குழுக்களை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். அத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயற்பாடுகளுக்கான நிர்வாக செயற்பாட்டினையும் அரசியலமைப்புச் சபைக்கான இச் செயலகம் மேற்கொள்கின்றது.

அவற்றுள் வழிப்படுத்தும் குழுவின் ஒழுங்கான அமர்வுகளை திட்டமிடுவதும், அதற்குரிய வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுவதும் அரசியலமைப்புச் சபையின் செயலகத்தின் பிரதான செயற்பாடாக விளங்குகின்றது. அத்துடன் குறிப்பிட்ட குழுக்களுக்கு தேவையான வளபொருட்களை வழங்குதல், நிபுணர்களின் பங்களிப்புக்களை ஒருங்கிணைத்தல், மற்றும் ஆய்வுகளுக்கு தேவையான அனுசரணைகளை வழங்குதல் என்பனவும் அவற்றுள் சில செயற்பாடுகளாக விளங்குகின்றன.

வழிப்படுத்தும் குழுவினால் வேண்டப்படுகின்ற போது அதற்கேற்ப வகையில் நிபுணர்கள் குழுவினை ஒழுங்குபடுத்துவதும், அவர்களுக்கான ஏற்பாட்டு உதவிகளை வழங்குவதும் அரசியலமைப்புச் சபைச் செயலகத்தினதும் செயலாளரினதும் முக்கிய பணியாக விளங்குகின்றது. அத்துடன் நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கல்வி ஆய்வுகள் மற்றும் நிபுணர்களது வாய்மூலமான கருத்துக்கள் உள்ளிட்ட உள்ளீட்டு மூலவளங்களை வழங்குவதும் ஒழுங்குபடுத்துவதும் அரசியலமைப்புச் செயலகத்தின் பணியாக விளங்குகின்றது. அவ்வகையில், விடயப் பொறிமுறைகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் பொருட்டு அரசியலமைப்பு சபைச் செயலகத்தினால் உபகுழுக்கள் என்ற வகையான சூழலில் நிபுணர்கள் குழு அடங்கிய வகையில் வெவ்வேறு தனித்தனியான கூட்டத்தொடர்கள்  மேற்கொள்ளப்பட்டன.

பேராசிரியர். சூரி ரத்னபால

பதவி - குயின்லாந்து பல்கலையின் ஓய்வுபெற்ற சட்டத்துறை பேராசிரியராகவும், அவுஸ்திரேலியாவின் சட்ட மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பகுதி நேர ஆணையாளராகவும் இவர் விளங்குகின்றார்.

தகுதிகள் - LLB (கொழும்பு), LLM (மக்குவாரி பல்கலைக்கழகம்), PhD (குயின்லாந்து), மற்றும் அவுஸ்திரேலியாவின் சட்டத்துறை அக்கடமியின் அங்கத்தவராகவும் (FAAL) உள்ளார்.

அநுபவம் - குயின்லாந்து பல்கலைக்கழகத்தின் பொதுச் சட்டத்துறை பேராசிரியராகவும் உள்ளார்.

பேராசிரியர். ஒஸ்டின் புள்ளே

பேராசிரியர். ஏ.எம். நவரத்ண பண்டார

பதவி

தகுதிகள் - DPhil (யோர்க்) மற்றும் MA (பேராதெனிய)

அநுபவம் - பேராதெனிய பல்கலைக்கழக கலைப்பீடத்துக்கான முன்னாள் பீடாதிபதியாக பணியாற்றியுள்ளார், மற்றும் அரசியல் விஞ்ஞானத் துறைக்கான தலைவராகவும் விளங்குகிறார்.

என். செல்வக்குமரன்

பதவி - கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறைக்கான சிரேஷ்ட விரிவுரையாளர்

தகுதிகள் - LL.B (Hons),M.Phil மற்றும் சட்டவழக்கறிஞர்

அநுபவம் -சட்டத்துறையின் பீடாதிபதியாக 2000 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.

பேராசிரியர். காமினா குணரத்ன

பதவி - இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்வித் துறையின் பேராசிரியர், சட்ட வழக்கறிஞர்

தகுதிகள் -LLB (கொழும்பு), LLM (ஹார்வார்ட்), PhD(வைகடோ(Waikato)

அநுபவம் - தேசிய மனித உரிமைகள் நடவடிக்கைத் திட்டம் 2017 - 2021 க்கான அங்கத்தவர், சுற்றுச்சூழல் உரிமைகளுக்கான வரைவுக்குழுவின் அங்கத்தவர் (செப்டம்பர் 2016), பெண்கள் மற்றும் பெண் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து அவற்றிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்கான ஆணைக்குழு - எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையினை அமுல்படுத்தும் செயலணியின் அங்கத்தவர் (ஏப்ரல் 2015), இலங்கையின் சட்ட ஆணைக்குழுவின் அங்கத்தவர் ( ஜூலை 2011 இலிருந்து இன்று வரை)

கலாநிதி.கபில பெரேரா

சுரேன் பெர்னான்டோ

பதவி - சட்ட வழக்கறிஞர்

தகுதிகள் - LL.B (Hons) கொழும்பு, LL. M. (லண்டன்)

அநுபவம் - சிவில் - வர்த்தகத்துறை, அரசியலமைப்பு மற்றும் பொதுச்சட்டத்துறைகளில் சட்ட தொழிலுநராகவுள்ளார்.

நிரான் அன்கிற்றெல்

p>பதவி - சட்ட வழக்கறிஞர்

தகுதிகள் - LL.B (Honors) கொழும்பு, LL. M. நியூயோர்க் 

அநுபவம் - சட்டக்கல்விக்கான தெற்காசிய மையத்தின் இணை நிறுவுனர் மற்றும் சட்ட ஆலோசகர், மனித உரிமைகள், பொதுச் சட்டம் மற்றும் பல விடயத்துறைகளுக்கான வழக்கறிஞர்.

அசோக குணவர்த்தன

திருமதி சாமிந்திரி சப்ரமது

பதவி - சட்ட வழக்கறிஞர் / யு.என்.டி.பி இன் தகவல் அறியும் உரிமை மீதான தொழில்நுட்ப ஆலோசகர்

தகுதிகள் -தொழில் / கல்வித்துறை - சட்ட வழக்கறிஞர், B.A (Hons.)பொருளியல், டெல்லி பல்கலைக்கழகம், LLB கொழும்பு பல்கலைக்கழகம், LLM வேல்ஸ் பல்கலைக்கழகம். M.A (சர்வதேச அபிவிருத்தி), சர்வதேச பட்டதாரி நிறுவன மற்றும் அபிவிருத்தி கற்கைகள், ஜெனீவா.

கடைசி ஐந்து வருடங்களுக்கான அநுபவம் - இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலக தலைமையாளர் (2014 - 2016), சிரேஷ்ட ஆய்வாளர், இன ஆய்வுகளுக்கான சர்வதேச மையம் (ICES) (2012-2014), ஆய்வு ஆலோசகர் வறுமை தொடர்பான பகுப்பாய்வுகளுக்கான மையம் (CEPA) (2012-2014), (ஆய்வு குவியம் - போருக்கு பின்னரான ஜனநாயகமாக்கல்/ மத நல்லிணக்கம் மற்றும் மத நல்லிணக்க உரையாடல்/ அரசியல் பொருளாதார பகுப்பாய்வு/ அரசின் சட்டப்படியான நிலை

அவ்வகையில்  குறிப்பிட்ட நிபுணர்களை உள்ளடக்கிய நிபுணர் குழு

ஒன்று அரசியலமைப்புச் சபையினால் மற்றும் / அல்லது வழிப்படுத்தும் குழுவினரால் நியமிக்கப்பட்டனர். அவ்வகையில் அவ் நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்தவர்கள் ,
 
 • பேராசிரியர். சூரி ரத்னபால
 • பேராசிரியர். ஒஸ்டின் புள்ளே
 • பேராசிரியர். ஏ.ம். நவரத்ன பண்டார
 • திரு.என். செல்வக்குமாரன்
 • கலாநிதி.கமேனா குணரத்ன
 • கலாநிதி.கபில பெரேரா
 • திரு.சுரேன் பெர்னான்டோ
 • திரு.நிரான் அன்கிற்றெல்
 • அசோக குணவர்த்தன
 • திருமதி சாமிந்திரி சப்ரமது

அரசியலமைப்புச் சபையின் ஆறு உபகுழுக்களும் ஒவ்வொரு அமர்வின் போதும் வழிப்படுத்தும் குழுவுடன் இணைந்த வகையில் செயற்படும். அரசியலமைப்புச் சபை செயலகத்தின் வௌிப்படுத்துதலுக்கேற்ப வழிப்படுத்தும் குழுவுக்கு நேரத்துக்கு நேரம் வழங்கப்படுகின்ற குறிப்பிட்ட விடயப்பரப்புக்கள் குறித்ததான வழிகாட்டல்கள் மற்றும் உந்துதலுக்கான திறவுகோல்களை ஒவ்வொரு அமர்வின் போதும் சிறந்த முறையில் ஒன்றாக இணைந்த வகையில் சபையின் வழிப்படுத்தும் குழுவும் உப குழுக்களும் மேற்கொண்டன. ஒழுங்காக நடைபெறும் வட்ட மேசை கலந்துரையாடல்களானவை ஒவ்வொரு குறிப்பிட்ட விடயப் பரப்புக்களிலும்  ஏனையோர்களிடமிருந்து பெறப்படுகின்ற பல தரப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்ட ஒவ்வொரு விடயங்களிலும் நிபுணர் குழுவினால் முன்னிலைப்படுத்தி பொதுவான நடைமுறைகளை மேற்கொள்ள வழிவகுத்தது.  குறிப்பாக உபகுழுக்களினால் தயார் செய்யப்படுகின்ற இறுதி அறிக்கைகள் தயாரிப்புக்கு இவ் கலந்துரையாடல்கள் மிகுந்த ஆதரவினை வழங்கி நிற்கின்றன.

குறித்த செயன்முறைக்கான ஆய்வுகளுக்கான உதவி அரசியலமைப்புச் செயலகத்தின் கல்வியியலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை உள்ளடக்கிய ஆய்வுக் குழுவினரால் சிறந்த முறையில் விரிவாக்கமான முறையில் வழங்கப்பட்டது. குறிப்பாக இவ் ஆய்வாளர்கள் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அது தொடர்பான பொருத்தமான துறைகளில் மிகுந்த அனுபவமுள்ள ஆய்வாளர்களாக கருதப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உபகுழுக்களினது ஆழ்ந்த ஆதரவினைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் ஒவ்வொரு விடயப் பரப்புக்களிலும் சிறந்த தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பீட்டு ரீதியான ஆய்வுகளும் ஒவ்வொரு குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறாக அனைத்து விடயப்பரப்புக்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறிப்பிட்ட உபகுழுக்களுக்கு வழங்கி அவர்களது கருத்துக்களும் பெறப்பட்டன. இவ்வகையில் வழிப்படுத்தும் குழுவுக்கு விடயப்பரப்புக்களில் ஆதரவினை வழங்கும் வகையில் ஒவ்வொரு உப குழுக்களும் செயற்பட்டதுடன், அரசியலமைப்பின் சிறந்த சேவையின் பொருட்டு வழிப்படுத்தும் குழுக்களும் உப குழுக்களும் தமது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டன.  அரசியலமைப்புச் சபையின் ஊடகப் பணியாட் தொகுதியானது அரசியலமைப்புச் சபைக்கான ஊடகப் பணியாட் தொகுதியொன்றினை நிறுவிப் பேணுவதுடன், அரசியலமைப்பினை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை முறைக்கு தகுந்த ஏற்றுக் கொள்ளக் கூடியதான வகையில் விழிப்புணர்வு வழங்குவதற்கு பொருத்தமான வழி வகைகளை கொண்டு காணப்பட வேண்டுமென்பதுடன், மூன்று மொழிகளிலும் சமூக ஊடகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.  அவ்வகையில் ஊடகத்தினால் பொதுமக்களுக்கு வௌியிடப்படும் அனைத்து தகவல்களும் அரசியலமைப்புச் சபையினாலோ அல்லது வழிப்படுத்தும் குழுவினராலோ ஏற்றுக் கொள்ளப்பட்டு பொது மக்களின் விழிப்புணர்வுக்காக வௌிப்படுத்தப்படுவதாக கருதப்படும்.

அதற்கு மேலதிகமாக நாட்டின் அரசியலமைப்பு தொடர்பில் பயிற்சி நெறிகளை ஒழுங்கு படுத்துதலும், பயிற்சிப் பட்டறைகளை மேற்கொள்வதும் அரசியலமைப்புச் சபைச் செயலகத்தின் இன்னுமோர் பணியாக விளங்குகின்றது. அவ்வகையில் அரசியலமைப்பு சபையின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதித்துறை பற்றிய உப குழுக்களுடனான நிபுணத்துவ சந்திப்பொன்று சர்வதேச நிபுணர்களின் கலந்துகொள்ளளுடன் 2016 ஜூலை மாதம் பாராளுமன்ற கட்டிடட்டொகுதியிலுள்ள குழு அறையில் நடைபெற்றது. நடைபெற்ற இவ் நிகழ்வானது பாராளுமன்ற அங்கத்துவர்களின் பங்களிப்புடனும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடனும், சட்ட வரைஞர் திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடனும் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய செயலகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

அத்துடன் அரசியலமைப்பு பிரேரணை வரைவுச் செயற்பாட்டின் போது சிறந்த பெறுபேறுகளை மேலும் பெற்றுக் கொள்ளும் வகையில் உலகம் முழுவதிலும் இருந்தும் இது தொடர்பிலான அறிவும் அநுபவமும் வாய்ந்த நிபுணர்களின் பங்குபற்றுதலுடனான சர்வதேச நிபுணர்களின் சந்திப்பொன்று செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் பாராளுமன்ற செயலகத்தில் வழிநடாத்தப்பட்டது.  அரசியலமைப்பு சபை செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் சர்வதேச நிபுணர்களுடனான பயிற்சிப் பட்டறையானது அரசியலமைப்பு வரைவினை தயார் செய்தல், தயாரித்தல் தொடர்பில் பிரதான கவனத்தை செலுத்தியது. இந்த நிகழ்வானது அரசாங்கத்தின் முக்கிய சில நிறுவனங்களின் நன்மைகளை பெரிதும் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் உள்ளூர் திட்டக்குறிப்புக்கான நிபுணர்கள், மற்றும் சட்டவரைஞர் திணைக்கள அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.